பில்லா 3 ஆ… அஜித் இயக்குனர் சொன்ன அதிரடி பதில்…தெறிக்கவிடும் ரசிகர்கள்
Ajith: நடிகர் அஜித் குமார் நடிப்பில் அடுத்து பில்லா 3 உருவாகும் என பேசப்பட்டு வந்த நிலையில் அப்படத்தின் இயக்குனர் விஷ்ணுவர்தன் சுவாரஸ்ய தகவலை தற்போது வெளியிட்டிருக்கிறார்.
அஜித் - விஷ்ணுவர்தன் கூட்டணி
ரஜினிகாந்தின் நடிப்பில் வெளிவந்த பில்லா படத்தின் ரீமேக்காக வெளிவந்தது அஜித்தின் பில்லா. இப்படத்தினை விஷ்ணுவர்தன் இயக்கி இருந்தார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். அஜித்துடன் நயன்தாரா, பிரபு, நமீதா, ரஹ்மான் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.
அஜித்தை இயக்க முதலில் கிடைத்த இரண்டு வாய்ப்பை மிஸ் செய்த விஷ்ணுவர்தன் மூன்றாவதாக கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டார். அஜித்துக்கு சூப்பர் ஸ்கிரிப்ட் எழுதிக்கொண்டு செல்ல ரீமேக் படத்தில் தான் நடிக்க முடிவெடுத்து இருப்பதாக கூறிவிட்டாராம்.
விஷ்ணுவர்தனின் ஆஸ்தான இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்தார். 6 பாடல்களை கொண்ட இப்படத்தில் இரண்டு ரீமிக்ஸும் இருந்தது. முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் இரண்டாம் பாகமும் எடுக்கப்பட்டது.
பில்லா3
இந்நிலையில் பேட்டி ஒன்றில் விஷ்ணுவர்தனிடம் பில்லா 3 இயக்கப்படுமா எனக் கேள்வி முன்வைக்கப்பட்டது. கண்டிப்பாக மூன்றாம் பாகம் எல்லாம் வராது. ஆனால் அஜித்துடன் பேச்சுவார்த்தையில் இருக்கிறோம். விரைவில் ஒரு படம் இயக்கப்படும் எனவும் தெரிவித்து இருக்கிறார்.
தற்போது விடாமுயற்சி படத்தினை முடித்த அஜித்குமார் அடுத்த திரைப்படமான குட் பேட் அக்லியில் பிஸியாக நடித்து இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பும் விரைந்து முடிக்கப்பட்டு படம் வரும் ஜனவரி மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதை தொடர்ந்து பெரிய பிரேக்கிற்கு பின்னர் அடுத்த படத்தில் அஜித் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனர் பிரசாந்த் நீலுடன் இணைவார் என பேசப்பட்டு வந்த நிலையில் சிறுத்தை சிவா மற்றும் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் இணைய இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.