கோலிவுட்டில் வெண்ணிலா கபடிக்குழு படம் மூலம் நடிகராக அறிமுகமான விஷ்ணு விஷால் அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்து தன்னை ஒரு ஹீரோவாக நிலை நிறுத்தி கொண்டார். சமீபகாலமாக நல்ல கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் விஷ்ணு விஷால் நடிப்பில் சில ஆண்டுகளாக எந்தவொரு புதிய படமும் வெளியாகவில்லை.
இவர் நடிப்பில் இறுதியாக வெளியான ராட்சசன் படம் விமர்சன ரீதியாகவும் சரி வியாபார ரீதியாகவும் சரி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள எஃப்ஐஆர் படம் வரும் 11 ஆம் தேதி வெளியாக உள்ளது. எப்போதோ முடிவடைந்த இப்படம் கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் தற்போது தாமதமாக வெளியாகிறது.
இயக்குனர் மனு ஆனந்த் இயக்கியுள்ள இப்படத்தில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படத்தில் பிரபல இயக்குனர் கௌதம் மேனனும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. தற்போது எஃப்ஐஆர் படம் வெளியாகும் முன்பே நல்ல லாபம் பார்த்து வருகிறது. அதன்படி இப்படத்தின் ரிலீசுக்கு பிந்தைய ஓடிடி உரிமையை பிரபல ஓடிடி நிறுவனம் ஒன்று அதிக விலைக்கு வாங்கியுள்ளது.
அந்த நிறுவனம் வேறு யாருமல்ல அமேசான் பிரைம் நிறுவனம் தான். இந்நிறுவனம் எஃப்ஐஆர் படத்தின் டிஜிட்டல் உரிமையை சுமார் ரூ.7 கோடிக்கு கைப்பற்றி உள்ளதாம். ஓடிடி உரிமை நல்ல விலைக்கு விற்பனையாகி உள்ளதால் விஷ்ணு விஷால் மற்றும் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளார்களாம்.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…