இப்ப தெரியுதா? ஏன் அவங்கள கூப்பிடுறது இல்லைனு.. ‘டியூட்’ இசை வெளியீட்டு விழாவில் எல்லை மீறிய பிரியங்கா

வழக்கம் போல வாயைக் கொடுத்து மாட்டிக் கொண்ட பிரியங்கா.. டியூட் இசை வெளியீட்டு விழாவில் கல்லூரி நிர்வாகத்தையே அவமானப்படுத்திடுச்சே
தீபாவளி ரிலீஸாக கடந்த 17 ஆம் தேதி வெளியான திரைப்படம் டியூட். பிரதீப் ரெங்கநாதன், மமீதா பைஜூ நடிப்பில் வெளியான இந்தப் படம் இளசுகளை வெகுவாக கவர்ந்துள்ளது. கலர்ஃபுல்லான காதல் கதைகளுக்கு மத்தியில் சாதிய மனநிலையின் இன்னொரு பக்கத்தையும் இந்தப் படத்தின் மூலம் பேசியிருக்கிறார் இயக்குனர் கீர்த்தீஸ்வரன். இது திருச்சிற்றம்பலம் படத்தின் சில காட்சிகளை ஒத்து இருப்பதாக படம் பார்த்த சில பேர் கூறினார்கள்.
அதாவது காதல் தோல்வியில் உழன்று கொண்டிருக்கும் பிரதீப்பை மமீதா பைஜூ பேசி பேசி தேற்றுகிறார். ஒரு கட்டத்தில் தன்னுடைய காதலை மமீதா பைஜூ பிரதீப்பிடம் தெரிவிக்கிறார். ஆனால் மமீதா பைஜூவுடன் நட்புடனேயே பழகி வரும் பிரதீப் அவர் காதலை ஏற்க மறுக்கிறார். இதனால் வேறு வழியின்றி மமீதா பைஜூ ஊர் மாறி சென்று விடுகிறார். அந்த பிரிவு பிரதீப்பை போட்டு வாட்டுகிறது.
அதன் பிறகு பிரதீப் மமீதா பைஜூவிடன் காதலை சொல்ல மமீதா அதை ஏற்கிறாரா இல்லையா என்பதுதான் மீதி கதை. காதல், காமெடி, சண்டை என எல்லா எமோஷன்களிலும் பிரதீப் ஸ்கோர் செய்திருக்கிறார். இதில் பிரதீப்பின் மாமாவாக சரத்குமாரும் காமெடி, செண்டிமெண்ட், கலாட்டா என தூள் கிளப்பியிருக்கிறார். இவர்களுடன் ரோகிணி, நேஹா செட்டி, சத்யா இவர்களும் சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாய்ராம் கல்லூரியில்தான் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது விஜய் டிவி ப்ராடக்ட் பிரியங்கா. எப்போதுமே பெரிய பெரிய பட இசை வெளியீட்டு விழா என்றால் டிடி, விஜி அஞ்சனா, கார்த்தி, மணிமேகலை ஆகியோர்தான் தொகுத்து வழங்குவார்கள். பெரும்பாலும் பிரியங்கா வரமாட்டார்.
ஆனால் டியூட் படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியை காமெடியாக கொண்டு போகலாம் என்ற பேர் வழியில் அந்த கல்லூரி நிர்வாகத்தையே அவமானப்படுத்துவது போல் பேசியிருக்கிறார். அதாவது இந்த கல்லூரியில் யாராது டியூட் ஹீரோ டியூட் ஹீரோயின் யாராவது இருக்காங்களாப்பா?னு கேட்க ஒட்டுமொத்த கல்லூரியும் பாலு பாலு பாலு என கத்தியது.
பிரியங்காவும் பாலு பாலு பாலு என கத்த அதன் பிறகுதான் அவருக்கு தெரிந்தது அந்த பாலு வேறு யாருமில்லை, சாய்கல்லூரியின் ஃபவுண்டர் பாலு சார் என்று. இந்த வீடியோ இப்போது சோசியல் மீடியாக்களில் வைரலாக, ‘இதனால்தான் இந்த தற்குறி பிரியங்காவை நிகழ்ச்சி தொகுத்து வழங்க யாரும் கூப்பிடுறதில்ல. விஜய் டிவிதான் இதன் தகுதிக்கு லாய்க்கு. வழக்கமாக டிவில உளற மாதிரி இங்கேயும் வந்து உளறிக்கிட்டு இருக்கு’ என பிரியங்காவை விமர்சித்து வருகிறார்கள்.
மேலும் கல்லூரி வளாகத்தில் பல துறைகளில் சாதித்தவர்களை அழைத்து மாணவர்கள் முன் பேச வைப்பார்கள். ஆனால் இப்போது இன்ஸ்டா, டிவி சேனல்களில் பிரபலமானவர்களை பேச வைத்தால் இதான் கதி என கடுமையாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.