என்ன பார்த்தா எப்படி தெரியுது? கேள்வி கேட்ட பிரியங்காவை வாயடைக்க வைத்த சரத்குமார்

தற்போது டியூட் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. பிரதீப் ரெங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு சாய் அப்யங்கர் இசையமைத்திருக்கிறார். அனிருத் முதலில் எந்த ஹைப்புடன் இந்த சினிமாத்துறையில் அடியெடுத்து வைத்தாரோ அதே ஹைப்பில்தான் இப்போது சாய் அப்யங்கரும் ஸ்டெப் எடுத்து வைத்திருக்கிறார்.
அனிருத்துக்குண்டான் மாஸ், கிரேஸ் என இப்போது சாய் அப்யங்கர் பக்கமும் திரும்பியிருக்கிறது. குறிப்பாக பெண்களை கவர்ந்த இசையமைப்பாளராக சாய் அப்யங்கர் திகழ்ந்து வருகிறார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரியங்காதான் தொகுத்து வழங்கிவந்தார். அப்போது சரத்குமாரிடம் பிரியங்கா வசமாக சிக்கியுள்ளார். சரத்குமார் மேடைக்கு வந்ததும் பிரியங்கா ஒரு கேள்வியை கேட்டார்.
இந்த புது தலைமுறை நடிகர்களுடன் நடிக்கும் போது உங்களுடைய அனுபவம் எப்படி இருந்துச்சு என கேட்டார். உடனே சரத்குமார் ‘அப்போ நான் யாரு? எனக்கும் இப்போதுள்ள தலைமுறை நடிகர்களுக்கும் இடைவெளியே கிடையாது. நான் ஒவ்வொரு படம் நடிக்கும் போதும் முதல் படமாகத்தான் பார்க்கிறேன். இன்னும் நான் சினிமாவில் கற்றுக்கொண்டுதான் இருக்கிறேன். கற்றது கைம்மண்ணளவு, கல்லாதது உலகளவு’ என கூறினார்.
உடனே பிரியங்கா ‘சாரி, நீங்க ஒரு லெஜெண்ட்’ என சொல்லி முடித்தார். அதுமட்டுமில்லாமல் இங்கு வரும் ஒவ்வொருத்தரும் முத்தம் கொடுக்கிறீங்க, கட்டிப்பிடிக்கிறீங்க, அதுக்காக என்னையும் கட்டிப்பிடிங்கனு சொல்லமாட்டேன் என சரத்குமார் மீண்டும் பிரியங்காவிடம் கேட்க, ஓடிவந்து சரத்குமாரை கட்டியணைத்து அவர் அன்பை பரிமாறிக் கொண்டார் பிரியங்கா.
சரத்குமாரை பொறுத்தவரைக்கும் ஒவ்வொரு மேடையையும் அவர் கலகலப்பாகத்தான் கொண்டு போவார். அடிப்படையில் அவர் ஒரு ஹியூமரான நடிகரும் கூட. அதோடு தனக்கு வயசு ஆகிவிட்டது என சொன்னால் அது அவரால் தாங்கவே முடியாது. எப்போது இளமையாகவும் கட்டுக்கோப்பாகவும் தன் மேனியை கவனித்து வருபவர் சரத்குமார்.