என்னது தனுஷ் சிவகார்த்திகேயனை அறைந்தாரா? என்ன சொல்கிறார் இந்த பிரபலம்?

சினிமாவில் அவ்வப்போது பல்வேறு வதந்திகள் வருவது இயல்புதான். நான் கடவுள் பாலாவுக்கும், அஜீத்துக்கும் துப்பாக்கியைக் காட்டி மோதல், துப்பாக்கியைக் காட்டி ஷங்கரை மிரட்டிய தயாரிப்பாளர் குஞ்சுமோன் அப்படி இப்படின்னு எதையாவது சொல்வாங்க. அந்த வகையில் இப்போது தனுஷ் சிவகார்த்திகேயனை ஒரு சமயம் அறைந்தார் என்றும் வதந்தி வருகிறது. இது உண்மையான்னு பிரபல தயாரிப்பாளர் ஆஸ்கர் மூவீஸ் பாலாஜி பிரபு சொல்கிறார். வாங்க பார்க்கலாம்.
தனுஷூக்கு, சிவகார்த்திகேயன் நன்றிக்கடனா இருக்காரான்னா இரண்டு பேரும் எதிரியா ஆகிட்ட மாதிரி இருக்காங்க. தனுஷூக்கு நயன்தாரா, அனிருத் எதிரி. சிவகார்த்திகேயனுக்கு அந்த இருவரும் நண்பர்கள்.
சினிமாவில் என்ன வேணாலும் நடக்கும். தனுஷ் தான் சிவகார்த்திகேயனை அறிமுகப்படுத்தினாரு. அவர்தான் வாழ்க்கைக் கொடுத்தாரு. காமெடியனா, ஹீரோவா அறிமுகப்படுத்தினாரு. இன்னைக்கு அவருக்கு சிவகார்த்திகேயன் நன்றிக்கடன் பட்டுருக்காரான்னா கிடையவே கிடையாது.
தனுஷ் இன்னைக்குப் பல படங்களைத் தயாரிக்கிறாரு. அவர் சிவகார்த்திகேயனை அறைந்தாரான்னு ஒரு செய்தி வருது. அது ஒரு வதந்திதான். இப்படி ஏற்கனவே நிறைய வதந்திகள் இருக்கு.
பாலாவோட நான் கடவுள் படத்துல ஒரு ஸ்டேஜிக்கு மேல அஜித் நடிக்க மறுத்துட்டாரு. விருப்பமில்லைன்னு சொல்லிட்டாரு. அப்போ அட்வான்ஸை திருப்பிக் கொடுன்னு சொன்னாரு. அப்போ பாலா, ஒரு பைனான்சியர்னு நாலஞ்சு பேர் ஒரு ஓட்டல்ல மிரட்டுனதா செய்தி உண்டு.
பாலாவும், அஜித்தும் மாற்றி மாற்றி துப்பாக்கிய காட்டுனதா சொல்றாங்க. இதுக்கு ஆதாரம் கிடையாது. அதே மாதிரி ஷங்கர்கிட்ட இனி அடுத்தடுத்து நீ படம் பண்ணிருவீயான்னு தயாரிப்பாளர் குஞ்சுமோன் துப்பாக்கியைக் காட்டுனதா செய்திகள் இருக்கு. எதிர்நீச்சல் படத்து டைரக்டர், தனுஷ், அனிருத், சிவகார்த்திகேயன் எல்லாரும் ஒண்ணா இருந்து பேசிருக்காங்க.
அப்போ 'என் படத்துல தான் தொடர்ந்து நடிக்கணும்'னு சிவகார்த்திகேயன்கிட்ட தனுஷ் சொன்னாராம். 'இல்ல இல்ல. நான் வேறொரு படத்துல கமிட் ஆகியிருக்கேன்'னு சொன்னபோது அங்கு கைகலப்பு நடந்ததா செய்திகள் உண்டு. தனுஷ்
சிவகார்த்திகேயனை அடிச்சாரான்னு தெரியல. இப்படி பல செய்திகள் சினிமா உலகில் உண்டு. அதே மாதிரி இதுவும் ஒரு வதந்தி தான். தனுஷூக்கு சிவகார்த்திகேயன் மேலும் கோபம். அனிருத் மேலும் கோபம். என்கிறார் பாலாஜி பிரபு.