விஜயகாந்துக்கும் விஜய்க்கும் உள்ள ஒரே ஒரு ஒற்றுமை... அதேதான்... கண்டுபிடிங்க பார்க்கலாம்...!

by Sankaran |
vijayakanth, vijay
X

நடிகர் விஜய், விஜயகாந்த் இடத்தைப் பிடிப்பாரா? மூணாவது இடத்துக்கு வருவாரான்னு சொல்றாங்க. 5வது இடத்துக்கு வரக்கூட வாய்ப்பில்லை என்கிறார் பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி. இவர் வேறு என்னவெல்லாம் சொல்றாருன்னு பாருங்க.

அரசியல் அறிவே இல்லாமல் ரசிகர்களால பண்ணலாம்னு குருட்டாம்போக்குல இறங்கிட்டாரு. விஜயைத் தூங்கிக்கிட்டு இருக்கும்போது எழுப்புங்க. பல்கலைக்கழகம் யாரோட கட்டுப்பாட்டுல இருக்குன்னு கேளுங்க. பல்கலைக்கழகம்னா என்னன்னு முதல்ல கேட்பாரு. அப்புறம் யுனிவர்சிட்டியா அது இருக்கும்ல. எத்தனையோ பேரு கன்ட்ரோல்ல தான் இருக்கும்னு சொல்வாரு. அப்புறம் அவருதான்னு சொன்னா, ஓ அவரான்னு கேட்பாரு. சொல்லிட்டாருன்னா அது பெரிய விஷயம்.

பல்கலைக்கழக வளாகத்துல மாணவிக்கு பாலியல் தொந்தரவு... அது முடிஞ்சி எத்தனை நாள் கழிச்சி புகார் கொடுக்கறாரு. அதுவும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கிட்ட போய் மனு கொடுக்குறாரு. அவரு கட்டுப்பாட்டுல தான் இருக்கு. அவர்தான் துணைவேந்தரை நியமிக்கறவரு. யாரு திருடனோ அவருக்கிட்டேயே போய் விசாரிக்க சொல்லி மனு கொடுக்காரு. அப்படின்னா அரசியல் அறிவு கொஞ்சம் கூட இல்லாதவர்தான் விஜய்.

அரசியல் அறிவு, அரசியல் கூறு இருந்தா இப்படி மனு கொடுப்பாரா? அடிப்படை அரசியல்னா என்னன்னே தெரியாத விஜய் தான் இன்னைக்கு அரசியலுக்குள்ள வந்துருக்காரு.

vijay

விஜயகாந்துடன் விஜயை ஒப்பிடுவதே அபத்தம். இருவருக்கும் உள்ள வித்தியாசம்னா மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசம். ஆனா ஒரே ஒரு ஒற்றுமை இருக்கு. அவரு பேரு விஜயகாந்த். இவரு பேரு விஜய். அதுல பாதி பேரு இவருக்கு இருக்கு. அவ்வளவுதான் ரெண்டு பேருக்கும் ஒற்றுமையே தவிர மற்ற எல்லாமே வேற்றுமைதான். விஜயகாந்துக்கு எதிரானவர்தான் விஜய்னு ஆதாரப்பூர்வமா அவ்வளவு விஷயங்கள் சொல்லலாம்.

விஜயகாந்த் படப்பிடிப்பின்போது அத்தனை வகை ஊழியர்களுக்கும் ஒரே வகையான சாப்பாடு போட்டார். ஆனால் விஜய்க்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை. அதே போல யாருக்காவது ஒரு பிரச்சனைன்னா உடனடியாகத் தீர்த்து வைப்பார். ஆனால் விஜய்க்கு இதுலயும் சம்பந்தமில்லை. இவர் யாரிமும் பேசுவதும் கிடையாது. விஜய் நம்பர் ஒன் பயந்தாங்கொள்ளி.

ஒரு கடிதத்தில் கூட ஒருவர் பெயரைச் சொல்ல தயங்குபவர். ஆனால் விஜயகாந்த் பிரச்சனையை தைரியமாக எதிர்கொண்டு தன்னால் முடிந்தவரை போராடுபவர். இப்படி நிறைய வித்தியாசங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story