விஜயகாந்த் தன் மகனுக்காக செய்யத் தவறிய அந்த விஷயம்... எப்படி மிஸ் பண்ணினாரு?
கேப்டன் விஜயகாந்த் தன்னோட மகன் சண்முகப்பாண்டியனுக்காக செய்யத் தவறிய விஷயம் குறித்து பிரபல வலைப்பேச்சாளர் அந்தனன் இவ்வாறு தெரிவித்துள்ளார். வாங்க என்னன்னு பார்க்கலாம்.
படைத்தலைவன் டிரைலர் கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டியன் நடிப்பில் வந்துள்ளது. அண்மையில் வந்த அனைத்துப் படங்களுமே விஜயகாந்தை எமோஷனல் புரோமோஷனுக்கான கண்டன்ட்டாகத் தான் பார்க்க வேண்டி இருக்கு. அதே மாதிரி சண்முகப்பாண்டியன் படமும் அப்படித்தான் இருக்கு. யார் யாரோ விஜயகாந்த் பேரைச் சொல்லி வாழ்ந்துக்கிட்டு இருக்குற போது அவரோட பையன் வைக்கிறதுல என்ன பிரச்சனை?
நிச்சயமா அதுதான் முதல்ல நடந்துருக்கணும். அவரு உயிரோட இருந்த காலகட்டத்துலயே இரண்டு பேரும் சேர்ந்து நடிக்கணும்னு நினைச்சாங்க. ஒரு படத்துல ஏதோ வந்தாரு. சகாப்தம்கற படத்துல பையனுக்காக வந்தாரு. ஆனா அந்தப் படமே பெரிசா ஒர்க் அவுட் ஆகல. ஆனா எனக்கு என்ன வருத்தம்னா விஜயகாந்த் அவரோட குடும்பம் இவ்ளோ நாள் சினிமாவுல இருக்காங்க.
பையனுக்கு சினிமாவுல ஆசை வரும்போது ஒரு மிகப்பெரிய செட்டப்போட அந்தப் பையன அறிமுகப்படுத்தி இருக்கணும். மிகப்பெரிய இயக்குனர்கிட்ட கொண்டு போய் கொடுத்து கம்ப்ளீட்டா அவரை வேற ஒரு ஆளா மாத்தி அப்படித்தானே அறிமுகப்படுத்திருக்கணும். அது மிகப்பெரிய இடத்துல கொண்டு போய் வச்சிருக்கும். அந்த விஷயத்தை ஏன் ரொம்ப அசால்டா ஹேண்டில் பண்ணாங்கன்னு தெரியல.
ஆனா நல்லவேளையா இன்னைக்குக் கொஞ்சம் மாத்துறாங்க. இந்தப் படைத்தலைவன் படத்தோட டிரைலரைப் பார்க்கும்போது கொஞ்சம் நம்பிக்கை வருது. யானை, அதுல அந்தப் பையன் நிக்கிறது, ஏதோ விஜயகாந்தோட மினியேச்சர் மாதிரி இருக்காரு. அவரு கண்ணுல இருக்குற அந்தப் பவரு, அவரை அவரு தயார் பண்ணி வச்சிருக்காரு. எல்லாத்துக்கும் தாண்டி இந்தப் படத்துல AI ல விஜயகாந்த் வர்ற போர்ஷன் நிச்சயமா பரவசப்படுத்தும்னு நான் நம்புறேன்.
ஏன்னா ஏஐ ல அந்தக் கண்ணைப் பார்க்கும்போது பழைய விஜயகாந்த் வந்துட்டாரோன்னு தோணுது. இதெல்லாம் அவருக்கு பிளஸ்ஸா இருக்கணும். இந்தப் படமாவது அவருக்கு வாழ்க்கையைக் கொடுக்கணும்னு நினைக்கிறேன். இன்னொன்னு இங்க சினிமாவுல இருக்குற பல முக்கியமான நடிகர்களுக்கு விஜயகாந்தின் மகனைக் கொண்டு வரணும்கற எண்ணம் வரணும்.
ஏன்னா விஜயகாந்த் இந்த சினிமாவுக்கு அவ்ளோ பண்ணிருக்காரு. அவரோட பையனைக் கொண்டு வரவேண்டியது ஒவ்வொருவரின் தார்மீக கடமை. அப்போ இந்தப் படம் வரும்போது ஏதோ தன்னால் முடிஞ்ச ஒரு புரொமோஷனோ வேறு எதுவோ பெரிய நடிகர்கள் ரஜினி, கமல், சிவகார்த்திகேயன் வரை மனமுவந்து செய்யணும். சிம்பு வரைக்கும் அதை செய்யணும்.
எல்லாருக்குமே அந்த ஆசை இருந்தது. கும்கி வரிசையில இந்த யானை கதையும் வந்துட்டுப் போகட்டுமே. விஷால் ஏற்கனவே 'கண்டிப்பா உன்னோட அடுத்த படத்துல நடிச்சிக் கொடுப்பேன்'னாரு. அது வெறும் உதட்டளவில் இருக்கக்கூடாது. ஏன்னா அது அடுத்த ஸ்டெப்புக்கேப் போகல. எனக்கு தெரிஞ்சி இந்தப் படம் நல்லாருக்கும்னு தோணுது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.