இர்பானுக்கு என்னாச்சு? ஏன் அவரு புத்தி இப்படி எல்லாம் போகுது..?

by sankaran |   ( Updated:2024-10-22 15:31:02  )
irfan
X

சில மாதங்களாகவே பிரபல யூடியூபர் இர்பானின் கொடி ரொம்ப உயரத்துல பறக்குது. சாதாரண யூடியூபர் மெல்ல மெல்ல வளர்ந்து பல லட்சம் ரசிகர்களைப் பெற்றுள்ளார். காரணம் அவரோட வெள்ளந்தியான முகம் என்கிறார் பிரபல வலைப்பேச்சாளர் அந்தனன்.

அவர் சமீபத்தில் செய்த ஒரு செயல் மிகப்பெரிய அளவில் வைரலானது. அதைப் பற்றி அந்தனன் என்ன சொல்றாருன்னு பார்ப்போம்.

இர்பான் ஏர்போர்ட்டுக்கு லுங்கிக் கட்டிக்கிட்டுலாம் போனாரு. அப்படிப்பட்ட இர்பான் திடீரென திமுகவின் முக்கிய பிரமுகரான கனிமொழி அவர்களைப் பேட்டி எடுக்கிறாரு.

ஆளுநரோடு உட்கார்ந்து டின்னர் சாப்பிடுறாரு. அவர் மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் தொடர்புல இருந்ததும் நான் தான்னு ஒரு திமிர் வந்துடுது. அந்தளவு அவரோட வீடியோக்கள் வந்துடுது. அவரோட செயல்பாடுகள்தான் முக்கியம்.

கருவில் இருப்பது ஆணா பெண்ணான்னு தெரிந்து கொள்வது இந்தியாவில் குற்றம். அதனால அவர் வெளிநாட்டுக்குப் போயிட்டாரு. அங்கே போயி அவரோட மனைவி என்ன குழந்தையைப் பெற்றெடுக்கப் போறாங்கறதை ஸ்கேன் எடுத்து வீடியோவா எடுத்துப் போட்டாரு.

இது பலருக்கும் தவறான முன்னுதாரணமாகி விடும்னு பல விமர்சனங்கள் பாய்ந்தன. அதுவும் மெல்ல கடந்து போனது. அவரோட மனைவியை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். குழந்தையும் பிறக்குது. மருத்துவரே அனுமதிக்கிறார்.


அந்தத் தொப்புள்கொடியைக் கட் பண்றாரு. கணவர் அருகில் இருப்பது மிகப்பெரிய விஷயம் தான். ஆனாலும் ஒரு மருத்துவர் செய்ய வேண்டிய வேலையை இர்பான் எப்படி செய்யலாம்னு விமர்சனம் எழுகிறது. ஆனா அதுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கல.

சுகாதாரத் துறை நாங்க விளக்கம் கேட்போம்னு சொல்லிருக்காங்க. நடவடிக்கை எடுக்கப்படுமான்னு தெரியல. அண்மைக்காலங்களில் அவரது நடவடிக்கை பெரிய அளவில் பேசப்படுகிறது. அவர் கவனமாக இருக்க வேண்டியது முக்கியம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

யூடியூபில் பேசுற ஒரு பிரபலம் எல்லாருக்கும் நல்ல ஒரு ரோல் மாடலாகவே இருக்கணுமே தவிர ஃபாலோயர்ஸ்சுக்கும், வீவர்ஸ்சுக்கும் பேராசைப்பட்டு தவறான செயல்களைச் செய்து அனைவருக்கும் ஒரு தவறான முன்னுதாரணமாக அவரது செயல்பாடுகள் அமைந்து விடக்கூடாது. இதுதான் சமூக வலைதளங்களில் பயணிக்கும் சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

Next Story