மீண்டும் மதுப் பழக்கமா?.. ரோபோ சங்கர் உடல்நிலை பாதிக்கப்பட்டது எப்படி?…
Robo Shankar: கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் ரோபோ சங்கர். அதன்பின் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளிலும் இவர் ஜட்ஜாக இருந்திருக்கிறார். டிவி மட்டுமில்லாமல் தமிழகமெங்கும் பல ஊர்களுக்கும் சென்று கலை நிகழ்ச்சிகளிலும் இவர் பங்கேற்றுள்ளார். நடிகர்களைப் போல பேசும் மிமிக்ரி மற்றும் டான்ஸ் மிமிக்ரி ஆகியவற்றின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் இவர்.
ரோபோ சங்கர் நடித்த முக்கிய திரைப்படங்கள்:
இவருக்கு இந்திரஜா என்கிற மகளும் உண்.டு இவர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் படத்தில் பாண்டியம்மா என்கிற வேடத்தில் நடித்திருந்தார். டிவியில் பிரபலமானதை தொடர்ந்து ரோபோ சங்கருக்கு சினிமாவிலும் வாய்ப்புகள் கிடைத்தன. அதில் இரும்புத்திரை, கலகலப்பு 2, மாரி, மாரி 2, விஸ்வாசம், மிஸ்டர் லோக்கல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற படங்கள் அவருக்கு முக்கிய படங்களாக அமைந்தது.
அளவுக்கு அதிகமான மதுப்பழக்கம்:
ரோபோ சங்கருக்கு மதுப் பழக்கம் இருந்தது. அது அளவுக்கு அதிகமாக சென்றதால் ஒரு வருடத்திற்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மஞ்சள் காமாலை நோய் வந்து அவரின் கல்லீரல் பாதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. மருத்துவர்களின் சிகிச்சையால் குணமடைந்த ரோபோ சங்கர் சில மாதங்கள் நடிப்புக்க்கு இடைவெளி விட்டார்.
ஒரு கட்டத்தில் உடல்நிலை தேறி மீண்டும் சினிமாவில் நடிக்க வந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த ஒரு புதுப் பட பூஜையிலும் அவர் கலந்து கொண்டார். இந்நிலையில் ஒரு புதிய படத்தில் அவர் நடித்துக் கொண்டிருந்த போது ஷூட்டிங்கில் திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டு சரிந்து கீழே விழுந்தார். படப்பிடிப்பு குழுவினர் உடனே அவரை அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.
மீண்டும் உடல்நிலை பாதிப்பு:
ஆனால் ரோபோ சங்கர் கண்விழிக்கவில்லை. அவரின் உடல் மோசமடைந்திருப்பதாக கூறிய மருத்துவர் முதலுதவி அளித்துவிட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க சொல்ல ரோபோ சங்கர் குடும்பத்தினர் அவரை ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தினர். இன்று காலை முதல் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் தற்போது மரணம் அடைந்திருக்கிறார்.
இதைத்தொடர்ந்து ரோபோ சங்கருக்கு மீண்டும் மதுப்பழக்கம் ஏற்பட்டதாக சிலர் சொல்லி வருகிறார்கள். ஆனால் ரோபோ சங்கரின் குடும்பத்தினர் இதை மறுத்திருக்கிறார்கள். அவரின் மகள் இந்திரஜா ‘வாய்ப்பு கிடைத்தால் என்ன வேணுமாலும் பேசுவார்கள்’ என சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
