அன்னைக்கு சொன்னதுதான் இன்னைக்கு... சூர்யா படத்தோட தோல்விக்கு இதுதான் காரணமா?

by Sankaran |   ( Updated:2024-12-24 03:31:05  )
surya
X

ஒரு படம் ஓடுவதும், ஓடாமல் இருப்பதும் ரசிகர்களின் ரசனையைப் பொருத்துத் தான் இருக்கிறது. அவர்களுக்கு அந்தக் காலகட்டத்திற்குரிய நல்ல கதை அம்சம் கொண்ட படங்களைக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் ரசிப்பார்கள். படத்தை ஓட வைப்பார்கள். காலத்திற்கு ஒத்துவராத வேற லெவல் படத்தைக் கொடுத்தாலும் சொதப்பல் ஆகி விடும்.

அதே போல அதர பழைய கதையாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இதுவரை சொல்லப்படாத விஷயமாகவும் அது சமூகத்திற்குப் பயனுள்ளதாகவும் இருந்தால் மட்டுமே அந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெறும். சில படங்களைக் கோடி கணக்கான பட்ஜெட்டில் தயாரிப்பார்கள். ஆனால் படம் ஓடாது. சில சின்ன பட்ஜெட்டில் வெளியாகும். அந்தப் படங்கள் மிகப்பெரும் வரவேற்பைப் பெறும். காரணம் புதுமையான திரைக்கதைதான். அது ரசிக்கும் வகையில் இருக்கும்போது எந்த ஒரு ரசிகன் என்றாலும் படத்தை ரசித்து விடுவான்.

இன்னொரு முக்கியமான விஷயம் சினிமா ரசிகர்களைப் பொருத்தவரை இது என் தலைவர் படம். இதை மட்டும்தான் நான் பார்ப்பேன். வேறு யாரு படத்தையும் பார்க்க மாட்டேன் என்று சொல்ல மாட்டார்கள்.


அவர்களது அபிமான நட்சத்திரங்களையும் தாண்டி வேறு நட்சத்திரங்கள், புதுமுகங்கள் என்றாலும் கூட அந்தப் படத்தின் கதை அழுத்தமாக இருக்கும்பட்சத்தில் அனைத்துத் தரப்பு ரசிகர்களுமே படத்திற்கு பேராதரவு தருவர்.

அதனால் தான் இளம் இயக்குனர்கள் அவர்களது ரசனையை விரல் நுனியில் தெரிந்து வைத்துக்கொண்டு டிரெண்டான கதையைக் கொடுத்து சூப்பர்ஹிட் அடித்து வருகிறார்கள். உதாரணத்திற்கு லோகேஷ் கனகராஜ் ஒரு இளம் இயக்குனர். மாஸ்டர், கைதி, விக்ரம் என பல வெற்றிப்படங்களைத் தந்தவர்.

ஆனால் அவர் ரஜினியை வைத்துத் தற்போது கூலி என்ப படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்திற்கு முன்னதாக ரஜினி வேட்டையன் படத்தில் நடித்தார். அதை த.செ.ஞானவேல் இயக்கி இருந்தார். அந்தப் படத்தில் வரும் ரஜினிக்கும், கூலி படத்தில் வரும் ரஜினிக்கும் நிறையவே வித்தியாசங்கள் உள்ளன. அது கதை வேறு வேறாக இருந்தாலும் அவரைக் காட்டும் விதம் என்று ஒன்று உள்ளது. வேட்டையன் எதிர்பார்த்த அளவு வரவேற்பைப் பெறவில்லை.

ஆனால் கூலியில் பார்க்கும் ரஜினியின் இளமைத்துடிப்பு அதிகமாக உள்ளது. ஸ்டைலாக அவர் ஆடும் டான்ஸ் ஸ்டெப்புகள் 74 வயது ரஜினியா இப்படி ஆடுகிறார் என்று நம்மை அசர வைக்கிறது. அந்த வகையில் ரஜினி ரசிகர்கள் அவரிடம் எதை எதிர்பார்ப்பார்கள் என்பதைத் தெளிவாக இயக்குனர் தெரிந்து வைத்துள்ளதால்தான் இப்படி ஒரு ரஜினியை நாம் பார்க்க முடிகிறது.


அந்த வகையில் சூர்யாவுடைய கருத்து ஒன்று இப்போது அவருக்கே ஆபத்தாக முடிந்துள்ளது. அவர் என்ன சொல்கிறார் என்று பாருங்க. தப்பான படத்தை ஹிட் ஆக்காதீங்க. சரியான படம் கொடுத்தா மட்டும் ஓட வைங்க. தப்பான படத்தை ஓட வைக்காதீங்க. அது என் படமா இருந்தாலும் சரி.

அப்ப தான் நல்ல கதைகளை தேடி நான் ஓட முடியும் என்று சூர்யா 2013ம் ஆண்டு ரசிகர்களிடம் கூறினார். அதன் பின் இதுவரை அவருக்கு திரையில் வெற்றிப்படம் அமையவில்லை. கடைசியாக வெளியான கங்குவா படம் வரை 11 வருடங்களாக அவருக்கு தொடர்ந்து சூர்யாவுக்குத் தோல்விதான் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story