புலி படத்துக்கு வச்ச குறி... பாகுபலி புயல்ல துவம்சம் ஆகிடுச்சே...!

by Sankaran |   ( Updated:2025-01-03 02:30:25  )
puli bagupali
X

தளபதி விஜய் நடிப்பில் வெளியான படம் புலி. 2015ல் சிம்புதேவன் இயக்கத்தில் வெளியான படம் புலி. விஜய், சுதீப், ஹன்சிகா, சுருதிஹாசன், ஸ்ரீதேவி, பிரபு, தம்பி ராமையா, நந்திதா, சத்யன், கருணாஸ், இமான் அண்ணாச்சி, ரோபோசங்கர் உள்பட பலர் நடித்த படம் புலி. தேவி ஸ்ரீபிரசாத் இசை அமைத்துள்ளார். புலி புலி, சிங்கிலியா ஆகிய குத்துப் பாடல்கள் மாஸாக இருந்தன.

இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் நட்டி. புலி படத்தைப் பொருத்தவரை எதிர்பார்த்த அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெறவில்லை. இதற்கு என்ன காரணம்? இதுகுறித்து நட்டி என்ன சொல்கிறார்னு பார்க்கலாமா...

அவுட்புட் நல்ல ஒர்த்தா அந்தப் படம் வந்தது. அதுல என்ன பிரச்சனைன்னா அந்தப் படத்தைப் பப்ளிசிட்டி பண்ணும்போது தயாரிப்பாளர்கள் சைடுல இருந்து அதிக பொருள்செலவுல பண்ணினாங்க.

அவங்க என்ன பண்ணிட்டாங்கன்னா ஒரு ஆக்ஷன் படம் மாதிரியான முன்னோட்டத்தைக் கொடுத்துட்டாங்க. ஆக்சுவலா விஜய் சார் எங்கிட்ட அந்தப் படத்தைப் பற்றிச் சொல்லும் போது நட்டி நான் ஒரு கதை கேட்டேன். அது வந்து 8 வயசுல இருந்து 15 வயசுக்குள்ள பசங்க இருப்பாங்கள்ல. அவங்களுக்கு நான் எதுவும் பெரிசா பண்ணினது இல்ல.

natti

எப்பவுமே ஆக்ஷன், யூத்னு போயிடுறேன். அவங்களுக்காக ஒரு படம் பண்ணனும்னு ஆசைப்பட்டேன். அப்படிப்பட்ட கதையைத் தான் நீங்க கேட்குறீங்க. கதை கேட்டேன். பிடிச்சிருந்தது. பேசுற ஆமை, பேசுற காக்கா, பறக்குற தவளை இந்த மாதிரி. லில்லி புட், சின்ன சின்ன மனிதர்கள், இதெல்லாம் வந்தவுடனே எல்லாம் குழந்தைகளுக்குப் போய்ச் சேரும்.

குழந்தைகளுக்குப் பிடிச்சிருந்துதுன்னா ஒரு பேமிலியே படத்தை வந்து பார்க்கும். அப்படித்தான் அந்தப் படத்தை பண்ணினோம். அப்படித்தான் அந்தப் படமும் வந்திருந்தது. அந்த டைம்ல பாகுபலி 1 வந்தது. அந்தக் கண்ணோட்டத்துல போய் பார்த்துட்டாங்க. அது அவங்களுக்கு அதிருப்தியா ஆகிடுச்சு என்கிறார் நட்டி.

Next Story