Vanankaan: வணங்கானில் சூர்யா விலக காரணம் பப்ளிக் இல்லையாம்... இயக்குனரை விளாசிய பிரபலம்
பாலா என்ன கொடுத்தாரு. சேது, நந்தா, பிதாமகன் ஓடுச்சு. நான் கடவுள், பரதேசி ஓடுச்சா? என கேள்வி எழுப்பி உள்ளார் பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு. அவர் இயக்குனர் பாலாவின் படங்கள் பற்றி என்னென்ன சொல்றாருன்னு பார்க்கலாமா...
கொலைப்படம்: பாலா எடுக்குறது கலைப்படம் இல்ல. கொலைப்படம். எல்லாரையும் டார்ச்சர் பண்ணி எடுக்கறதுக்குப் பேரு கலைப்படமா? எல்லாரையும் டார்ச்சர் பண்ணி, துன்புறுத்தி ஒரு ஹீரோவையாவது அவர் அழகா காமிச்சிருக்காரா? இல்ல ஒரு ஹீரோயின் அழகா இருக்காங்களா? கியூட்டா எந்தப் படத்திலயாவது இருக்காங்களா?
சேது படத்துல பர்ஸ்ட் ஆப்ல அழகான லவ் ஸ்டோரியைச் சொன்னாரு. செகண்ட் ஆப்ல அதே ஹீரோவை அடிச்சி நொறுக்கி சட்டியைக் கவுத்தி மண்டையை உடைச்சி எல்லாம் பண்ணினாரு. நந்தா படத்துல அழகா காமிச்சாங்களா? கேரக்டரா காமிச்சாரு. அதுவும் எக்ஸ்ட்ரீமா போயிடுது.
பிதாமகன் அலர்ஜி: பிதாமகன் படத்துல சூர்யா, லைலா கேரக்டர் எல்லாம் ரியல் லைஃப்ல பார்க்கவே முடியாது. விக்ரமை வெட்டியானாப் போட்டு அவர் டயலாக் பேச வந்தாலே அலர்ஜியா இருக்கும். பரதேசி படத்துல அதர்வாவை தேயிலைத் தோட்டத்துல ஓட விடுவாரு.
வணங்கான்: இப்ப வணங்கான் படத்துல சூர்யா விலகிட்டாருன்னா அதுக்கு என்ன காரணம். அவரை கன்னியாகுமரில கூட்டிட்டுப் போய் ஓடு ஓடுன்னா ஓடிக்கிட்டே இருந்தாரு.
சொல்ல சொல்ல ஓடுனாரு. எவ்வளவு ஒடுவாரு. அவர் இப்போ மிகப்பெரிய உயரத்துக்கு வந்துட்டாரு. பாலாவுக்கு நந்தா படம் மூலமா சூர்யாவுக்கு ஒரு உயரம் கொடுத்தாருங்கறது உண்மைதான்.
8 கோடி: இப்போ மார்க்கெட்ல இருக்குற ஏழெட்டு நடிகர்ல சூர்யாவும் ஒருவர். அவரைப் போய் பப்ளிக்ல வச்சிட்டு எத்தனை தடவை ஓடச் சொல்வீங்க? மரியாதையும் கொடுக்கறது இல்ல. கடைசில 8 கோடி ரூபாயை இன்வெஸ்ட் பண்ணிட்டு வேண்டாம்னு சொல்லிட்டு வந்துட்டார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.