கமல் கூட பண்ணியாச்சு.. அடுத்து ரஜினியுடன் எப்போ? மணிரத்னம் கொடுத்த அப்டேட்

manirathnam
தமிழ் சினிமாவின் இரு பெரும் தூண்களாக இருப்பவர்கள் ரஜினி மற்றும் கமல். இவர்களை வைத்து எத்தனையோ பல இயக்குனர்கள் பல நல்ல நல்ல வெற்றி படங்களை கொடுத்திருக்கின்றனர். அவர்கள் வரிசையில் மணிரத்னம் ரஜினியையும் கமலையும் வைத்து காலத்தால் என்றும் மறக்க முடியாத படங்களை கொடுத்திருக்கிறார். இரண்டுமே கல்ட் கிளாசிக் திரைப்படங்களாகவே அமைந்திருக்கின்றன.
கமலுக்கு நாயகன் ரஜினிக்கு தளபதி என அடுத்த தலைமுறை ரசிகர்களுக்கும் பிடிக்கும் மாதிரியான படங்களாகவே என்றென்றும் அந்த படங்கள் அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதில் நாயகன் திரைப்படத்திற்கு பிறகு 37 வருடங்கள் கடந்து மீண்டும் கமலுடன் இணைந்து இருக்கிறார் மணிரத்னம். அதுவே ஒரு பெரிய ஹைப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அதனால் தக் லைப் திரைப்படம் எந்த மாதிரியான ஒரு ஜானரில் வரப்போகிறது? நாயகன் படத்தை பீட் பண்ணுமா இல்லை நாயகன் படத்தின் தொடர்ச்சியாக இருக்குமா என்பது அனைவரின் கேள்வியாக பார்க்கப்படுகிறது. ஆனால் ஏதோ ஒரு வித்தியாசமான அணுகுமுறையை இந்த படத்தில் கமலும் மணிரத்தினமும் பின்பற்றி இருக்கிறார்கள் என்பது மட்டும் தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
இந்த நிலையில் ரஜினியை வைத்து மீண்டும் எப்போது படம் பண்ண போகிறீர்கள் என்ற கேள்விக்கு மணிரத்னம் அது ரஜினியை தான் கேட்க வேண்டும் என கூறி இருக்கிறார். அது மட்டுமல்ல ஒரு பெரிய ஸ்டாரை வைத்து படம் பண்ணுகிறோம் என்றால் அதற்கு ஏற்றபடி கதை அமைய வேண்டும். ஏதோ ஒரு கதை வைத்திருக்கிறோம். அவரிடம் போய் கேட்போம் என்று கேட்கக் கூடாது.
rajini
நல்ல ஒரு தீனி மாதிரியான கதை இருக்க வேண்டும். இதுவரை ரஜினி பண்ண படங்களில் இருந்து வித்தியாசப்பட வேண்டும். அதே சமயம் அவருடைய மார்கெட்டையும் நாம் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும். அந்த அடிப்படையில் தான் அவருக்கு கதை பண்ண வேண்டும். அது எப்போது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என மணிரத்னம் கூறியிருக்கிறார்.