நன்றிக்கடனைத் தீர்க்கப் போகும் அஜித்... அடுத்த படத்தின் இயக்குனர் அவரா?

by SANKARAN |   ( Updated:2025-07-19 13:30:43  )
Ajithkumar
X

அஜித் கடைசியாக நடித்து வெளியான படம் குட் பேட் அக்லி. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இந்தப் படத்தை ஒரு ஃபேன்பாய் படம்னே சொன்னாங்க. இந்தப் படத்துக்குக் கலவையான விமர்சனங்கள் வந்தன. இந்த நிலையில் அஜித்தின் அடுத்த பட இயக்குனர் யார் என்று பிரபல வலைப்பேச்சாளர் அந்தனன் சில தகவல்களைச் சொல்கிறார். வாங்க பார்க்கலாம்.

அடுத்த படம் அஜித் ஆதிக் ரவிச்சந்திரனுக்குத் தான் பண்றாரு. டைரக்டர முடிவு பண்ணிட்டாரு. ஆனா தயாரிப்பாளர்தான் யாருன்னு தெரியல. குட் பேட் அக்லியே அந்த தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவீ மேக்கர்ஸ் 70 கோடி வரை நஷ்டம்னு சொல்றாங்க. அதனால அந்த நிறுவனம் அஜித்தை வைத்து அடுத்த படம் எடுத்தால் கூட அஜித் கேட்குற சம்பளத்துக்கு முதல்ல ஒத்து வர மாட்டாங்க. இன்னொன்னு ஆதிக் ரவிச்சந்திரன் வேணாங்கறாங்க.

ஏன்னா படப்பிடிப்பு சமயத்துல இவருக்கும் தயாரிப்பு நிறுவனத்துக்கும் பெரிய பிரச்சனை இருந்தது. அதனால அவர்மீது அவங்க வெறுப்புல இருக்காங்க. வேற டைரக்டர்னா சொல்லுங்க. நாம பேசலாம்னு சொல்றாங்க. ஆனா அஜித் அடுத்த படம் ஆதிக் தான் பண்ணனும்கறதுல உறுதியா இருக்கு.

இதுக்கு இடையில அஜித்தை வச்சி அட்டகாசம், அமர்க்களம் படத்தை இயக்கிய சரண் ரெடியா இருக்காரு. அவரு அஜித்துக்குக் கதை சொல்லிருக்காரு. அது அஜித்துக்கும் பிடிச்சிட்டு. காதல் கைகொண்டதுக்கே பெரிய காரணம் சரண்தான்.


அவரு இயக்கிய அமர்க்களம் படத்துல தான் அஜித், ஷாலினியோட காதல் வளர்ந்தது. அந்தக் காதலை வளர்க்கறதுக்கு சரண் உதவி பண்ணினார். அந்த நன்றிக்கடனுக்காக அஜித் அவருக்கு ஒரு படம் பண்றாரு. இதுதான் அஜித்துக்கு இப்ப இருக்குற லைன் அப் என்கிறார் அந்தனன்.

1999ல் சரண் இயக்கத்தில் அஜித், ஷாலினி இணைந்து நடித்த படம் அமர்க்களம். பரத்வாஜ் இசையில் பாடல்கள் எல்லாமே அற்புதம். அதுவும் சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் பாடல் இப்போது வரை டிரெண்டிங் தான். உன்னோடு வாழாத, சொந்தக் குரலில் பாட, என் செய்தாயோ விதியே, மேகங்கள் என்னைத் தொட்டு, மகா கணபதி ஆகிய பாடல்களும் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளன. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் இது. இந்தப் படத்துக்குப் பிறகுதான் அஜித்துக்கு பல அதிரடி படங்கள் வெளிவந்தன.

Next Story