மாஸ்டர் 2 படத்துல மேட்சான ஹீரோ யாரு? பிரபலத்தோட கணிப்பு சரிதானா?

by SANKARAN |
master
X

லோகேஷ் கனகராஜ் இன்று தமிழ்த்திரை உலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர். இவரது படங்களுக்கு எல்லாமே தனி மவுசு தான். எல்லாமே சூப்பர்ஹிட். 10 படங்கள் தான் பண்ணுவேன் என்று இவர் சொன்னார். ஆனால் ரஜினிகாந்த் கடைசி படம் இதுதான்னு சொல்லிட்டு அடுத்தடுத்து படங்கள் நடித்தார். அதுமாதிரி தான் இவரும். முதலில் சொன்னதை திரும்ப வாபஸ் வாங்கி விட்டார்.

மாஸ்டர், லியோ என இரு படங்களையும் விஜயை வைத்து இயக்கினார். அதிலும் லியோவை விட மாஸ்டர் தான் லோகேஷூக்கு ரொம்ப பிடிச்சதாம். லியோ 2 படத்துக்குத் தான் எல்லாரும் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இருந்தார்கள். ஆனால் இப்போது மாஸ்டர் 2 கதை தன்னிடம் இருப்பதாக லோகேஷ் தெரிவித்துள்ளார். லியோவை விட பர்சனலா எனக்கு ஜேடி யோட கேரக்டர் தான் வைப்பா இருக்கும். மாஸ்டர் 2 படத்தோட கதை என் கிட்ட இருக்கு. அது விஜய் சாருக்கும் தெரியும். மாஸ்டர் படத்தோட கதை இன்னும் கம்ப்ளீட் ஆகாம இருக்கு என்றும் தெரிவித்துள்ளாராம் லோகேஷ்.

ஏற்கனவே விஜய் கோட் படத்துல சிவகார்த்திகேயன் கையில துப்பாக்கியைக் கொடுத்தார். அது எஸ்கேவின் மனதில் ஆழப்பதிந்து விட்டது. அடுத்த விஜய் நாமதான் அப்படின்னு நினைச்சிட்டாரு. இந்த நேரத்துல லோகேஷ் வேற மாஸ்டர் 2 கதை எங்கிட்ட இருக்குன்னு சொல்லிட்டாரு. விஜய் கண்டிப்பா நடிக்க முடியாது. அப்படின்னா சிவகார்த்திகேயனாகத் தான் இருக்கு. விஜய் இடத்துல அவரை வச்சி பண்ணினா தான் லோகேஷ் இணையறதால மிகப்பெரிய வியாபாரம் நடக்கும்.


முன்னாடியே லோகேஷூம் எஸ்.கே.வுக்கு ஒரு கதை இருக்கு என் சொல்லி இருக்கிறாராம். அப்படி பார்த்தால் லியோ 2 ல இரு பெரிய மகன்களுக்கு அப்பாவா நடிச்சிருப்பாரு விஜய். அது சிவகார்த்திகேயனுக்கு செட்டாகாது. அப்படின்னா கண்டிப்பா அது மாஸ்டர் 2ஆகத் தான் இருக்கும். விக்ரம்2 படத்தையும் சிவகார்த்திகேயன் பண்ண முடியாது.

லியோ படத்தையும் பண்ண முடியாது. அவருக்குன்னு புதுசா ஒரு படமும் பண்ண முடியாது. அதனால கூடிய சீக்கிரம் ஜேடி கேரக்டர்ல சிவகார்த்திகேயன் நடிக்க வாய்ப்பு இருக்கு. கமர்ஷியலா அவரு நல்ல நடிகர். அதனால ஜேடி கதாபாத்திரத்துல அவரு நடிக்கிறது மேட்சாகத் தான் இருக்கும். அதை ஏற்றுக் கொள்ளலாம். சூர்யா, ஹரிஷ்கல்யாண், கமல்னு வேற யாரு நடிச்சாலும் ஏத்துக்க முடியாது. மேற்கண்ட தகவலை மூத்த பத்திரிகையாளர் அர்ஷத் தெரிவித்துள்ளார்.

Next Story