தக் லைஃப் நாயகிகள் அபிராமி, திரிஷா... யாரு மூத்தவருன்னு தெரியுமா?

by SANKARAN |
abirami, trisha
X

மணிரத்னம் இயக்கத்தில் முதன் முறையாக கமல், சிம்பு காம்போ இணைகிறது. அதிலும் நாயகன் படத்தின் மகத்தான வெற்றிக்குப் பிறகு அதாவது 38 ஆண்டுகளுக்குப் பிறகு கமல், மணிரத்னம் காம்போ இணைகிறது. இதனால் படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் நிலவுகிறது. சமீபத்தில் வெளியான ஜிங்குச்சா பாடலும் அதில் கமலும், சிம்புவும் போட்ட ஆட்டமும் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.

தொடர்ந்து வெளியான டிரெய்லர் கூஸ்பம்ப்ஸைக் கிளப்பியுள்ளது. இதில் வில்லன் சிம்புதான் என்று தெரிந்து விட்டது. இருவரும் டான்ஸ் தான் ஆடுகிறார்கள் என்றால் ஃபைட்டிலும் தெறிக்கவிடுவார்கள் போல என இப்போதே ரசிகர்கள் பேச ஆரம்பித்து விட்டார்கள். அந்த வகையில் படத்தில் வரும் நாயகிகள் குறித்துப் பார்ப்போமா...

தக் லைஃப்ல கமலுக்குத் தான் திரிஷா, அபிராமி ஜோடி. சிம்புவுக்கு ஜோடியே கிடையாது. சிம்புவுக்குத் தான் திரிஷான்னு நாம நினைச்சோம். ஏன்னா அபிராமி தான் பெரியவங்க. வயசுல மூத்தவங்க. திரிஷா இளையவங்க. வயசுல சின்னவங்கன்னு நினைச்சோம்.

ஆனா திரிஷாவும், அபிராமியும் 1983லதான் பிறந்துருக்காங்க. இன்னும் சொல்லணும்னா திரிஷா தான் மூத்தவங்க. அவங்க 1983ல மே மாதம் பிறந்துருக்காங்க. அபிராமி அதே ஆண்டுல ஜூலைல தான் பிறந்துருக்காங்க.


சினிமாவில் சீனியர்னு பார்த்தா அது அபிராமி தான். தன்னோட பேரு திவ்யா தான். ஆனா கமலின் தீவிர ரசிகர். அவரது குணா படத்தில் அபிராமி என்ற கேரக்டர் தனக்குப் பிடித்துவிட்டதால் அந்தப் பேரையே சினிமாவுக்காகத் தனக்கு வைத்துக் கொண்டாராம். கமலுடன் 2004ல் விருமான்டி என்ற படத்தில் நடித்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.

அதே போல கமலுடன் மன்மதன் அம்பு படத்தில் திரிஷா ஜோடியாக நடித்துள்ளார். சிம்புவுடன் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து பட்டையைக் கிளப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று வரை திருமணம் ஆகாமல் முரட்டு சிங்கிளாகவே திரிஷா இருக்கிறார்.

5.6.2025ல் வெளிவரும் தக் லைஃப் படத்தில் அபிராமி, திரிஷா இருவரது அசாத்திய நடிப்பையும் கண்டுரசிக்கலாம்.

Next Story