விஜயுடன் இருக்கும் இந்த இரண்டு பேர் யார் தெரியுமா?!.. எல்லாம் ஒரு சேஃப்டிக்குதான்!...
Actor vijay: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் முக்கியமானவராக இருப்பவர் விஜய். கடந்த 30 வருடங்களாக சினிமாவில் நடித்து ஏராளமான ரசிகர் கூட்டத்தை கூட்டியிருக்கிறார். பூவே உனக்காக விஜயின் கெரியரில் ஒரு முக்கிய படமாக அமைந்தது. அதன்பின் துள்ளாத மனமும் துள்ளும், காதலுக்கு மரியாதை, கில்லி போன்ற படங்கள் மூலம் சினிமாவில் வசூல் மன்னனாக மாறினார்.
வெங்கட்பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இதில் ஒரு வேடத்திற்கு ஏ.ஐ. எனும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தினார்கள். அது ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெறவில்லை என்றாலும் படம் ஓடிவிட்டது. இப்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
இது அரசியல் தொடர்பான கதை என சொல்லப்படுகிறது. இந்த படத்தில் பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்துவிட்ட நிலையில் இது அவரின் கடைசி திரைப்படம் என்றே பலரும் நினைக்கிறார்கள். விஜயும் மீண்டும் சினிமாவுக்கு வரமாட்டேன் என சொல்லி இருக்கிறார்.
தளபதி 69 திரைப்படம் 2025ம் வருடம் அக்டோபர் மாதம் வெளியாகலாம் என கணிக்கப்படுகிறது. அதன்பின் முழுநேர அரசியல்வாதியாக செயல்பட்டு 2026 சட்டமன்ற தேர்தலை குறி வைத்திருக்கிறார் விஜய். அந்த தேர்தலில் தமிழக வெற்றிக் கழக கட்சியினை சேர்ந்த சேர்ந்தவர்கள் போட்டியிடவிருக்கிறார்கள்.
ஒருபக்கம், நேற்று கோவாவில் நடந்த நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணத்திலும் விஜய் கலந்து கொண்டார். இதற்காக சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் அவர் கோவா சென்றிருக்கிறார். அவருடன் அவரின் தோழி திரிஷாவும் சென்றதாக சொல்லப்படுகிறது.
கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் விஜய் பட்டி வேஷ்டி சட்டையுடன் கலந்து கொண்ட புகைப்படமும் வெளியானது. இரண்டு பேருடன் அவர் நிற்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த இரண்டு பேர் யார் என பலரும் யோசித்து வருகிறார்கள். அவர்கள் திருமணத்திற்கு வந்த கீர்த்தி சுரேஷின் உறவினர்களாக இருக்கலாம் என பலரும் நினைத்தார்கள்.
ஆனால், அவர்கள் இரண்டு பேரும் விஜயின் பாதுகாவலர்களாம். பொதுவாக நடிகர்கள் எங்கு போனாலும், எந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் ஜிம் பாய்ஸ் என சொல்லப்படும் பாதுகாவலர்களோடு போவார்கள். சமீபகாலமாக விஜய் எங்கு போனாலும் இந்த புகைப்படத்தில் இருக்கும் இரண்டு பேர்கள்தான் அவருக்கு பாதுகாப்பாக போகிறார்களாம். விக்கிரவாண்டி மாநாட்டில் விஜய் கலந்துகொண்ட போதும் இந்த இரண்டு பேரும்தான் அவருக்கு முக்கிய பாதுகாப்பாக இருந்திருக்கிறார்கள். அவர்களுடன் விஜய் எடுத்துக்கொண்ட புகைப்படம்தான் இது என்கிறார்கள். அவர்கள் இருவரும் கேரளாவை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.