தமிழ்சினிமாவின் இப்போதைய வசூல் சக்கரவர்த்தி யார்? ரஜினியா, அஜித்தா, விஜயா?

by SANKARAN |
ajith, rajni, vijay
X

தமிழ்த்திரை உலகில் வசூல் சக்கரவர்த்தி யார்னு கேட்டா அது காலத்துக்கு ஏற்ப மாறிக்கிட்டே இருக்கும். அந்த வகையில் ஒரு குறிப்பிட்ட நபரை மட்டும் சுட்டிக் காட்ட முடியாது.

இது சம்பந்தமாக பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் நடத்தும் யூடியூப் சேனல் ஒன்றில் கேள்வி பதில் நிகழ்ச்சியில் ரசிகர் ஒருவர் அவரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்.

தமிழ்சினிமாவில் இப்போதைய வசூல் சக்கரவர்த்தின்னு யாரையும் அடையாளம் காட்டுவது கஷ்டம். இந்த ஆண்டு வெளியான படங்களிலே மிக அதிகமான வசூலைச் செய்த படம்னா அது அஜித் நடித்த குட் பேட் அக்லி திரைப்படம்.

அதனால இந்த ஆண்டு வெளியான படங்களைக் கணக்கில் வைத்துக் கொண்டு சொல்றதுன்னா அஜித்தைச் சொல்லலாம். ஆனா தமிழ்சினிமாவைப் பொருத்தவரைக்கும் நிரந்தரமான வசூல் சக்கரவர்த்தின்னா அந்தப் பட்டம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்குத் தான் போகும் என்று சித்ரா லட்சுமணன் பதில் அளித்துள்ளார்.

விஜயைப் பொருத்தவரையில் அவருடைய படங்களும் மாஸானவை தான். கடந்த ஆண்டு வெளியான கோட் படம் கூட நல்ல வசூல் தான். ஆனால் இந்த ஆண்டு அவருடைய படம் எதுவும் வரவில்லை. ரஜினியை விடவும் அதிகமாக சம்பளம் வாங்குவதாகச் சொல்கிறார்கள். தற்போது நடித்துக் கொண்டு இருக்கும் ஜனநாயகன் படத்தில் விஜயின் சம்பளம் Rs.250 கோடியாம். இனி அவர் படமும் நடிக்கப்போவதில்லை. அரசியல்தான் முழுமூச்சு என்று அறிவித்து விட்டார்.


அதே நேரம் அஜித், விஜய், ரஜினி, கமல் என்ற 4 பேர்களும் முன்னணியில்தான் இருக்கிறார்கள். கமல் படம் எப்போதாவது தான் ஓடுகிறது. விக்ரம் படத்திற்குப் பிறகு அமரன் சொந்தத் தயாரிப்பில் நல்ல வசூலை அள்ளியது. ஆனால் தக் லைஃப் படுத்து விட்டது.

அந்த வகையில் விஜய், அஜித், ரஜினியை எடுத்துக் கொண்டால் ரஜினிக்கு இன்னும் மாஸ் குறையவில்லை என்றே சொல்லலாம். அதனால்தான் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடித்து வரும் கூலி படத்துக்கு அவ்ளோ ஹைப் இன்றும் உள்ளது.

Next Story