அஜீத் படத்தில் நடிச்ச அந்த ஹீரோயின் தான் இவரு... உங்களுக்கு அடையாளம் தெரியுதா?

by sankaran |   ( Updated:2024-10-22 14:30:29  )
அஜீத் படத்தில் நடிச்ச அந்த ஹீரோயின் தான் இவரு... உங்களுக்கு அடையாளம் தெரியுதா?
X

'தல' அஜீத்தின் ராஜா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் பிரியங்கா திரிவேதி. இவர் பார்க்க ரொம்ப கியூட்டாக இருப்பார். அந்தப் படம் தான் ரசிகர்கள் மத்தியில் சரியாகப் போகவில்லை. இவர் விக்ரம் நடித்த காதல் சடுகுடு படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார். இரு படங்களும் அவ்வளவாகப் போகவில்லை. ஆனால் இவர் இப்போது யார்? எங்கு இருக்கிறார்னு பார்க்கலாமா...

இப்போது பிரியங்கா திரிவேதியின் படம் ஒன்று லேட்டஸ்டாக வெளியாகி உள்ளது. பார்த்தால் ஆளே அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார். இவரா அவர்? எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேனே என்பது போல இருக்கிறார். எல்லாம் காலம் செய்த கோலம் தான்.

வயது ஏறுவது என்பது எல்லோருக்கும் பொதுவான விஷயம். யாரை ஏமாற்றினாலும் காலத்தை ஏமாற்ற முடியாது. இளவயதில் மேக்கப் போட்டு கருப்பை சிவப்பாக்குவோம். சிவப்பை வெள்ளையாக்குவோம். இன்னும் என்னென்னமோ மேஜிக் செய்வோம்.

அத்தனைக்கும் உடல் ஒத்துழைக்கும். கேட்டா அது இளரத்தம்னு சொல்வாங்க. அது இளநடிகைகளுக்கும் பொருந்துகிறது. ஆரம்பத்தில் எப்படி இருந்தாங்க? இப்போ இப்படி இருக்காங்களேன்னு ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் அப்படி இருந்தால் தான் இந்த வயதுக்கு அழகு என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

அதற்காக வயதானவர் ஆகிவிட்டாரே என்று யாரையும் ஏளனமாகப் பார்க்கக்கூடாது. எல்லாருக்கும் வரும் பொதுவான விஷயம் தான். எந்த வயதிலும் ஆரோக்கியமாகவும், உற்சாகமாகவும், மன அமைதியுடனும், நிம்மதியாகவும் இருந்தால் போதும்.


அதுவே நாம் செய்த புண்ணியத்தின் பலன் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் பிரியங்கா திரிவேதியும் வயதானாலும் அடையாளம் தெரியாமல் தான் போய்விட்டாரே தவிர இப்போதும் கியூட்டாகத் தான் இருக்கிறார். தற்போது கன்னட நடிகர் உபேந்திராவின் மனைவியாக இருக்கிறார்.

தமிழ், தெலுங்கு, கன்னட பட உலகில் புகழ் பெற்றவர் பிரியங்கா திரிவேதி. இவர் மேற்குவங்காளத்தைச் சேர்ந்தவர். கன்னட இயக்குனரும் நடிகருமான உபேந்திராவைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். தமிழில் ராஜ்ஜியம், ராஜா, காதல் சடுகுடு, ஜனனம் என சில படங்களில் மட்டும் நடித்துள்ளார். எதுவுமே பெரிய அளவில் ஹிட்டாகவில்லை.

Next Story