1. Home
  2. Cinema News

Coolie Movie: ‘விக்ரம்’ படத்துல தலைய வெட்டியும்? கூலி படத்துக்கு ‘ஏ’சர்டிஃபிக்கேட் கொடுத்த காரணம் இதுதானா?

Coolie Movie: ‘விக்ரம்’ படத்துல தலைய வெட்டியும்? கூலி படத்துக்கு ‘ஏ’சர்டிஃபிக்கேட் கொடுத்த காரணம் இதுதானா?

Coolie Movie: ரஜினி நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் கூலி. இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து நாகர்ஜுனா, சத்யராஜ், அமீர்கான், உபேந்திரா, சவுபின் சாகிர், சுருதிஹாசன் என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். பேன் இந்தியா திரைப்படமாக படம் பெரிய அளவில் உருவானது. அதேபோல படத்தின் மீதும் பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கு காரணம் லோகேஷ் கனகராஜ். தொடர்ந்து கார்த்தி, கமல், விஜய் இவர்களை வைத்து பாக்ஸ் ஆபீஸ் வெற்றிகளை கொடுத்து தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்திருந்தார் லோகேஷ்.

லோகேஷ் படம் என்றாலே சூப்பர் ஹிட் என்று சொல்லும் அளவுக்கு அவர் மீது ஒரு இமேஜ் இருந்தது. அதோடு ரஜினியுடன் இணைந்து ஒரு படம் எனும் போது இன்னும் ஹைப் அதிகரித்தது. எப்படி கமலுக்கு விக்ரம் என்ற ஒரு தரமான வெற்றியை கொடுத்தாரோ அதைப் போல ரஜினிக்கும் அதைவிட பெரிய வெற்றியை கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இருந்தாலும் கைதி விக்ரம் படம் மாதிரி கூலி திரைப்படம் ரசிகர்களை பெரிதாக ஈர்க்கவில்லை என்று தான் கூறி வருகிறார்கள்.

விக்ரம் இயக்கிய திரைப்படங்களிலேயே கைதி திரைப்படம் தான் ரசிகர்களுக்கு பிடித்த படம் என்றும் சொல்லி வருகிறார்கள். அந்த படத்திற்கு இணையாக இன்னும் லோகேஷ் படத்தை எடுக்கவில்லை என்றும் கூறி வருகிறார்கள். இருந்தாலும் கூலி திரைப்படத்தில் பிற மொழிகளில் இருக்கும் நட்சத்திரங்கள் நடித்திருப்பதால் வசூலிலும் பெரிய அளவில் சாதனை படைத்து வருகிறது. கூலி திரைப்படத்தை பொருத்தவரைக்கும் சென்சார் அமைப்பு ஏ சான்றிதழ் கொடுத்து அனைவருக்கும் அதிர்ச்சியை தந்தது.

அதனால் சிறு குழந்தைகளை படத்தை பார்க்க திரையரங்கம் அனுமதிக்கவில்லை. இதனால் இன்னும் எத்தனையோ பேர் படம் பார்க்க முடியாமல் தவித்து வருகின்றனர். அப்படி என்னதான் இந்த படத்தில் இருக்கிறது. ஏன் ஏ சான்றிதழை கொடுத்தார்கள் என்றும் பல கேள்விகள் எழுந்தன. இருந்தாலும் படத்தின் கதை அது நகரும் விதம் உடல்கள் எரிக்கப்படும் காட்சிகள் அடிக்கடி இந்த படத்தில் இருப்பது தான் முக்கிய காரணம் என கூறப்பட்டது.

ஆனால் இதற்குப் பின்னணியில் உள்ள உண்மையான காரணம் என்ன என்பது இப்போது தெரியவந்திருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக சமீபத்தில் அமலுக்கு வந்த புதிய விதிகளுக்குப் பிறகு தணிக்கை செய்யப்பட்ட முதல் படம் கூலி. அதனால் எதிர்கால படங்கள் அனைத்தும் ஒரே அளவுகளில் நீக்கி மதிப்பாய்வு செய்யப்படும். இதனால் சினிமா உலகில் புதிய மாற்றங்கள் தொடங்கியிருக்கின்றன .

மேலும் பல படங்கள் தணிக்கை குழுவிடமிருந்து ஏ சான்றிதழை பெறுவதை காண முடியும். அதனால்தான் கூலி திரைப்படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதாக தெரிகிறது. இதை பார்த்த பலரும் விக்ரம் படத்தில் ஹீரோயின் தலையையே துண்டித்தார் லோகேஷ். அந்தப் படத்திற்கு யுஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டது. ஆனால் கூலி திரைப்படத்தில் வழக்கமாக உள்ள வன்முறை காட்சிகள் தானே இருந்தன. ஏன் சான்றிதழ் கொடுக்கப்பட்டது என இதுவரை ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.