நண்பருக்காக விட்டுக் கொடுத்த பகத்பாசில்... கூலி படத்துல நடிக்காம போக அதான் காரணமா?

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக உள்ள படம் கூலி. இந்தப் படம் வரும் ஆகஸ்டு 14ல் வெளிவர உள்ளது. நாகர்ஜூனா, சௌபின் சாகிர், சத்யராஜ், உபேந்திரா, அமிர்கான், சுருதிஹாசன் என பல பெரிய பிரபலங்கள் நடிப்பதால் படத்துக்கு கூடுதல் எதிர்பார்ப்பு உள்ளது.
இந்தப் படத்தின் சிக்கிடு சிக்கிடு பாடலும், மோனிகா பாடலும் வெளியாகி உள்ளது. ரசிகர்கள் மத்தியில் மோனிகா பாடலில் சௌபின் சாகிரின் டான்ஸ் பிரபலமாகி உள்ளது. இவர் நடிக்க பகத்பாசில் தான் விட்டுக்கொடுத்தாரா என்று பார்க்கலாம்.
கூலி படத்து மோனிகா பாட்டைப் பார்த்து பகத்பாசில் தான் டிஸ்டர்ப் ஆகியிருக்காருன்னு சொல்றாங்க. சௌபின் சாகிர் அந்தப் பாட்டுல ஆடி அது கேரளாவுல பட்டையைக் கிளப்பி வருகிறது. அதுல ரஜினி வருவாருன்னு எதிர்பார்த்த ரசிகர்களுக்குத் தான் ஏமாற்றம். ஆனா சௌபின் சாகருக்குக் கிடைத்த பெருமைகள் பகத்பாசிலுக்கு வரவேண்டியது. அவருதான் அந்தக் கேரக்டர்ல நடிக்கிறதா இருந்துச்சாம்.
அவரு அந்த நேரத்துல தான் மாரீசன் கதையையும் கேட்டாராம். அப்போ கூலி படத்தோட அந்தப் படத்துக் கதையை ஒப்பிட்டுப் பார்த்துருக்காரு. கூலியை விட மாரீசன்ல தான் நமக்கு நடிக்கறதுக்கு நிறைய ஸ்கோப் இருக்குன்னு அந்தப் படத்துக்குப் போயிட்டாராம். இன்னொரு விஷயமும் கவனிக்கப்பட வேண்டியதாக உள்ளது. ரஜினி படம்னு நம்பி வேட்டையன் கதையாகி விடக்கூடாது.

இதுல இன்னொரு விஷயமும் இருக்கு. பகத்பாசிலும், சௌபின் சாகிரும் நெருங்கிய நண்பர்களாம். இருவரும் சேர்ந்து படங்கள் எல்லாம் தயாரித்துள்ளார்களாம். இரண்டு பேரும் சேர்ந்து நடிச்சிருக்காங்க. அதனால பகத்பாசில் தான் எனக்குக் கிடைச்ச வாய்ப்புல நீ நடின்னு விட்டுக் கொடுத்துருப்பாருன்னும் சொல்லப்படுகிறது.
மேற்கண்ட தகவலை வலைப்பேச்சு யூடியூப் சேனலில் அந்தனன், பிஸ்மி மற்றும் சக்திவேல் ஆகியோர் கலந்துரையாடலின்போது பகிர்ந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.