ரஜினி ஏன் பாலசந்தருடன் தொடர்ந்து படம் பண்ணல...? மகள் கொடுத்த சூப்பர் தகவல்!

இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் என்றாலே அவரது வித்தியாசமான கதைகளம் கொண்ட படங்கள்தான் நம் நினைவுக்கு வரும். அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சு, அவள் ஒரு தொடர்கதை, நினைத்தாலே இனிக்கும் ஆகிய படங்களைச் சொல்லலாம். ரஜினியுடன் தில்லு முல்லு படத்துக்குப் பிறகு பாலசந்தர் ஏன் படங்களை இயக்கவில்லை என்று அவரது மகள் புஷ்பா கந்தசாமி சொல்கிறார். வாங்க பார்க்கலாம்.
தெய்வத்தாய் படத்திற்கு வசனம் எழுதியவர் பாலசந்தர். எம்ஜிஆர் நடித்த படம். அந்தப் படத்துக்கு வசனம் எழுதியபோது கூட பாலசந்தருக்கு அதுல திருப்தி இல்லையாம். அந்த சீனுக்குப் பிட் ஆகாம எம்ஜிஆருக்காக எழுத வேண்டி இருந்ததாம்.
அதே மாதிரி எதிரொலி படத்துல சிவாஜி நடித்தார். அந்தப் படத்துல அவரோட கேரக்டரை மக்கள் ஏத்துக்கல. அந்தப் படத்துல சிவாஜி குற்றவாளியா நடிச்சிருப்பாரு. இவ்ளோ சேலஞ்சிங்கா ரோல் பண்ற சிவாஜிக்கு இப்படி ஒரு கேரக்டரை ஏன் கொடுத்தாங்கன்னு மக்களால ஏத்துக்க முடியல. அதனால அப்பாவுக்கு புரிஞ்சிடுச்சு.
இனி இமேஜிக்காகப் படம் பண்றதுல்ல. புதுமுகங்கள்னு பண்ணினார். ஜெமினி சாரைப் பொருத்தவரை குடும்ப நண்பர். அவருக்கு வித்தியாசமான ரோல்ஸ் எல்லாம் கொடுத்துப் பண்ணினாரு. ரஜினி சாரும் ஒரு லெவலுக்கு மேல பாலசந்தருடன் இணைந்து படம் பண்ணல. தில்லு முல்லுவுக்குப் பிறகு படம் பண்ணல.

ஆனா அதுக்குப் பிறகு பண்ணினா அது ரஜினி படமாகவும் இருக்காது. அப்பாவோட படமாகவும் இருக்காது. இவரோட கிரியேட்டிவிட்டி அடிபடும். அதனால சேர்ந்து பண்ணல. வளர்ற காலகட்டத்துல அவங்களுக்கு சரியான படங்களைக் கொடுத்தார் அப்பா. ஜனங்களுக்கும் எந்த விதத்திலும் ஏமாத்தாத வகையில் படங்கள் கொடுக்கணும்னு நினைப்பாரு என்கிறார் பாலசந்தரின் மகள் புஷ்பா கந்தசாமி.