ரஜினிகாந்த் படங்களில் வன்முறை அதிகமா? இதுக்கு சூப்பர்ஸ்டாரின்; பதில் என்ன?
தமிழ்சினிமாவின் உச்சநட்சத்திரமாகத் திகழ்ந்து வருபவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இப்போது 74 வயதானாலும் அவருக்கு இன்னும் ஸ்டைலும், அழகும் குறையவே இல்லை. தற்போது கூட லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் கூலி படத்தில் அபாரமாக டான்ஸ் ஆடுகிறார். தோளில் துண்டை சுழட்டுவதிலும், நடந்து கொண்டே ஸ்டைலாக டான்ஸ் ஸ்டெப் போடுவதும் பார்க்க அற்புதமாக உள்ளது.
அது ரஜினிக்கு இன்னும் இளமையும்,அந்தத் துடிப்பும் மாறாமல் உள்ளது என்பதையே அப்பட்டமாகக் காட்டுகிறது. இதைத்தானே ரசிகர்களும் விரும்புகிறார்கள் என்று இளம் இயக்குனரும் அப்படி ஒரு டான்ஸ்சை ரஜினிக்கு கொடுத்துள்ளார்.நடிகர் ரஜினிகாந்த் நடித்த படங்களில் தற்போது வன்முறை அதிகமாக இருக்கிறது. இதுபற்றி ரஜினிகாந்த் என்ன சொல்கிறார்னு பார்க்கலாமா...
என்னைப் பொருத்தவரைக்கும் எனக்கு வன்முறை கொஞ்சம்கூட பிடிக்காது. ஆனா தொடர்ந்து நான் அப்படிப்பட்ட படங்களில் நடிக்கக் காரணம் என்னை அப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் இயக்குனர்கள் நடிக்க வைத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதுதான்.
இப்போ சினிமா உலகில் என்னோட நிலைமை என்னன்னா எனக்கு யார் பணம் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு அந்தப் பணம் திரும்பக் கிடைக்கணும். அதனால்தான் தொடர்ந்து அவங்க அப்படி நடிக்க வைக்கிறாங்க. நானும் நடித்துக் கொண்டு இருக்கிறேன் என்கிறார் ரஜினி.
இதுல முக்கியமான விஷயம் என்னன்னா சூப்பர்ஸ்டார் இதை 20 ஆண்டுகளுக்கு முன்னாடி சொன்னாரு. அப்படி இருந்தும் இன்றைக்கு இந்தக் கருத்தை நான் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். ஏனென்றால் காலம் மாறினாலும் அவரது திரைப்படங்களின் போக்கு அதே மாதிரியாகத் தான் இருக்கு. அதன்காரணமாகத் தான் இன்றைக்கும் பொருந்தக்கூடிய கருத்தாக அவரது திரைப்படங்கள் இருக்கிறது. மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ரஜினியின் நடிப்பில் வெளியான வேட்டையன், ஜெயிலர், கபாலி, காலா என பல படங்கள் வன்முறை அதிகமாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினி ஆன்மிகவாதி என்றாலும் சினிமா அவரது தொழில் என்பதால் அங்கு அவர் சாதுவாகவே நடித்தால் வேலைக்கு ஆகாது. அதனால் சினிமா வேறு. நிஜ வாழ்க்கை வேறு என்பதாகத் தான் அவரது கருத்து உள்ளது. அதனால் நாம் இந்த இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம்.