எதையுமே காதில் வாங்காத மெய்யழகன் இயக்குனர்... வந்தே பாரத்ல போகச் சொன்னா வண்டிமாட்டுலயா போறது?
சூர்யாவின் 2 டி நிறுவனம் தயாரிக்க கார்த்தி, அரவிந்தசாமி இணைந்து நடித்த படம் மெய்யழகன். பிரேம்குமார் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. படத்தில் நீளம் தான் மைனஸ் பாயிண்ட். மற்றபடி கார்த்தி, அரவிந்தசாமியின் நடிப்பு மாஸ்.
அதிலும் கார்த்தியின் யதார்த்தமான நடிப்பு ரொம்பவே சூப்பர் என்கிறார் பிரபல வலைப்பேச்சாளர் அந்தனன். இந்தப் படம் குறித்து வேறு என்னென்ன சொல்கிறார்னு பார்க்கலாமா...
பிரேம்குமார் காதல் படத்துல லைப் டைம் படமாக 96அ எடுத்துட்டாரு. இதுக்கு அப்புறம் அதை அடிச்சிக்கறதுக்கு ஒரு படம் வரவே முடியாதுங்கற அளவுக்கு காதல் படம் பண்ணிட்டாரு. குடும்ப உறவுகள், நட்பு கலந்த மாதிரி படம் பண்ணனும். கூடவே சொந்த ஊரையும் எடுக்கணும்னு நினைச்சிருக்காரு.
அதுதான் இந்த மெய்யழகன் படம். எல்லாமே நல்ல விஷயம் தான். அவர் எடுத்துக்கிட்ட அந்த லைன் வந்து இதுவரைக்கும் யாருமே சினிமாவில் சொல்லாதது. எல்லாமே பிளஸ் தான். ஆனா படத்தோட நீளம் மிகப்பெரிய வில்லனா மாறிடுச்சு.
எப்பவுமே படைப்பாளிகள் நாம பண்றது தான் சரின்னு இருப்பாங்க. நல்லவேளையாக இந்தப் படத்தை 2 நாளைக்கு முன்னாடியே பிரஸ்சுக்குப் போட்டுட்டாங்க. எல்லாருமே ஒட்டுமொத்தமாக சொன்ன ஒரே வார்த்தை முக்கால் மணி நேரத்தைக் குறைங்கன்னு தான். அதிகபட்சம் முடியலைன்னாலும் அரை மணி நேரமாவது குறைச்சிடுங்கன்னு தான் சொன்னாங்க.
எல்லாருமே ஒரு அட்வைஸா தான் சொன்னாங்க. ஆனா எதையுமே இந்த டைரக்டர் காதில வாங்கிக்கல. அவரு ஒரு 7 நிமிஷம் நான் குறைக்கிறேன்னு சொல்லி குறைச்சிருக்காரு. ஆனா அது எந்த வகையிலும் பயன்படலை. பப்ளிக் ரிவியுல கேட்கும்போது ரொம்ப கஷ்டமா இருக்கு. ரொம்ப ஒரேயடியா போரடிக்குதுன்னு எல்லாம் சொல்லிட்டுப் போறாங்க.
இன்னைக்கு மக்களோட மனநிலையே எல்லாமே வேகமாக இருக்கணும்கற நிலைக்கு வந்துடுச்சு. வந்தே பாரத்ல போகும்போது வண்டி மாட்டுல ஓடுனீங்கன்னா அது ரொம்ப கஷ்டம்போல இருக்கு. அது வந்து அந்த டைரக்டருக்கு அவருடைய எதிர்பார்ப்பை எல்லாம் தவிடுபொடியாக்குன படமா மாறிருக்கு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.