நயன்தாராவுக்கு என்னாச்சு? ஏன் இப்படி ஆகிட்டாரு? இனி ஹீரோயின் கிடையாதா?

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:31:28  )

நயன்தாராவைப் பார்க்கறதுக்கு வேற மாதிரியா இருக்காரு. கன்னம் எல்லாம் உப்பிப் போய் இருக்காரு. இதுல பழைய கியூட்னஸ் இல்லையேன்னு கொஞ்சம் ஃபீல் பண்ண வைக்குது. அது ஏன் அப்படி ஆனது? பழைய நயன்தாராவை எங்கே? நயன்தாராவின் சமீப கால படங்களும் சொல்லிக்கொள்ளும்படியா இல்லை. இனி படங்களில் ஹீரோயினாக நடிப்பாரா? மாட்டாரா என்றெல்லாம் ரசிகர்கள் ஃபீல் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க.

ஐயா, சந்திரமுகி, பாஸ் என்கிற பாஸ்கரன், நானும் ரௌடிதான் படங்களில் நயன்தாரா அழகில் தெறிக்க விடுவாரு. அப்படி ஒரு அழகா என ரசிகர்கள் அவருக்காகவே பல தடவை படங்களைப் பார்த்ததும் உண்டு. ஆனால் இவர் சமீபத்தில் நடித்த படங்களில் அறம் ரொம்பவே வரவேற்பைப் பெற்றது. அதன் பிறகு மூக்குத்தி அம்மனுக்காகப் பேசப்பட்டார். தொடர்ந்து அன்னபூரணி படம் பெரிய பிளாப் ஆனது. அவருக்கு எந்தப் படங்களும் ஹிட் கொடுக்கவில்லை. இந்த மாற்றம் குறித்து அவரே சொல்லக் கேட்போமே...

எனக்கு என் புருவம் ரொம்ப பிடிக்கும். அதனால அதுக்கு நான் அதிக முக்கியத்துவம் கொடுப்பேன். அதை அழகுபடுத்த நிறைய நேரம் எடுத்துப்பேன். ஏன்னா, அது தான் முகத்துக்கு கேம் சேஞ்சர். அதுல அடிக்கடி வித்தியாசம் தெரியறதால தான் நான் ஏதோ மாற்றம் செஞ்சிருக்கேன்னு நினைக்கிறாங்க.

நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யல. டயட் எடை ஏற்ற இறக்கத்தால என் கன்னம் ஒட்டி இருக்குற மாதிரியும், தடியா இருக்குற மாதிரியும் தெரியுது. நீங்க என்னைக் கிள்ளிப் பார்க்கலாம். எரித்துக்கூட பார்க்கலாம். ஆனால், நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யவில்லை என்கிறார் நயன்தாரா.

பிளாஸ்டிக் சர்ஜரி குறித்து பல ஆண்டுகளாக நயன்தாராவிடம் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு இப்போதுதான் பதில் அளித்துள்ளார். விக்னேஷ் சிவனைக் கல்யாணம் கட்டியதும் குழந்தைகளுடன் அவ்வப்போது பிசியாகி விடுகிறார். நயன்தாரா பாலிவுட்டில் ஜவான் படத்தில் நடித்து இருந்தார். மாலிவுட்டிலும் பிசியாக நடித்து வருகிறாராம்.

Next Story