கே.ஜி.எஃப், ஆர்ஆர்ஆர், புஷ்பாவை கொண்டாடும் தமிழ் ரசிகர்கள் ஏன் தமிழ் படத்தை கொண்டாடல? காரணம் இதுதான்
சமீபத்தில் புஷ்பா 2 வெளியாகி ஒட்டுமொத்த ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு இதனுடைய முதல் பாகம் வெளியாகி கிட்டத்தட்ட 400 கோடிக்கும் மேல் வசூலை பெற்று சாதனை படைத்தது. அதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் வெளியாகி அதை விட பெரிய அளவு வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ், ஹிந்தி, என எல்லா மொழிகளிலும் படம் பட்டையை கிளப்பி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக தமிழ் ரசிகர்கள் புஷ்பா 2 வை கொண்டாடி வருகிறார்கள். இதற்கிடையில் ஒரு விமர்சனமும் பரவலாக வைரலாகி வருகின்றது. கே ஜி எஃப் ,ஆர்ஆர்ஆர், புஷ்பா போன்ற மற்ற மொழி படங்களை கொண்டாடும் தமிழ் ரசிகர்கள் ஏன் தமிழ் படங்களை கொண்டாட மறுக்கின்றனர் என்ற ஒரு கேள்வி எழுந்து வருகின்றன. இது பற்றி ஒரு மீம்ஸ் கூட சமூக வலைதளத்தில் வெளியானது.
அதாவது அந்த மீம்ஸில் ஆர்ஆர்ஆர், கே ஜி எஃப், காந்தாரா என இவர்கள் அடுத்தடுத்த பாகங்களை எடுத்து அடிச்சு துவம்சம் செய்து வருகின்றனர். இப்ப சமீபத்தில் வெளியான புஷ்பா படம் கூட அதனுடைய இரண்டாம் பாகம் பெரிய அளவில் வெற்றியடைந்து வருகிறது. அசால்டா அவங்க ஆயிரம் கோடி தட்டிட்டு போயிடுறாங்க. இதில் காந்தாரா 2வும் வரப்போகிறது.
னால் தமிழ் சினிமாவில் மட்டும் விஜய் பெருசா அஜித் பெருசா என்பதை தான் பேசிக்கொண்டு இருக்கீங்க. மற்றபடி படத்தை பெரிய அளவில் கொடுப்பதில்லை என அந்த மீம்ஸ் வைரலானது. இதைப் பற்றி நிருபர் ஒருவர் சொல்லும்போது கங்குவா மாதிரி ஒரு படத்தை கொடுத்தும் அதை கொண்டாடவில்லையே என்ற ஒரு கேள்வியை கேட்டிருந்தார். ஆனால் இதே கங்குவா திரைப்படம் தெலுங்கில் வந்திருந்தால் கொண்டாடி இருப்பீங்க. அதை ஏற்று இருப்பீங்க என்ற ஒரு கருத்தும் வெளியானது .
னால் அப்படியெல்லாம் இல்லை.படம் நன்றாக இருந்தால் ரசிப்போம் என்ற வகையில் அந்த நிருபர் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். ஆனால் இது எல்லாம் தவிர்த்து அந்தப் படங்கள் எல்லாம் பெரிய அளவில் கொண்டாடும் போது தமிழ் சினிமாவில் மட்டும் ஏன் பிரம்மாண்ட படங்கள் சமீப காலமாக தோல்வியை தருகின்றன. இதற்கு ஒரே ஒரு காரணம். தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்த மொழிகளை எடுத்துக் கொண்டால் ஒரு படத்தின் பட்ஜெட் 300 கோடி என்றால் அதில் நடிக்கும் நடிகரின் சம்பளம் வெறும் 10 கோடியாக தான் இருக்கும்.
மற்றபடி டெக்னீசியன்களுக்கு 10 கோடி மீதம் 280 கோடியில் படத்தை பிரம்மாண்டமாக கொடுத்து விடுகின்றனர் .ஆனால் தமிழ் சினிமாவை பொறுத்தவரைக்கும் ஒரு படத்தை 400லிருந்து 500 கோடி பட்ஜெட்டில் எடுக்கிறார்கள் என்றால் அதில் ஒரு நடிகருக்கான சம்பளம் 200 கோடி அப்படியே போய்விடுகிறது. இதில் டெக்னீசியன்கள் இயக்குனரின் சம்பளம் என அதில் ஒரு 50 கோடி போய் விடுகின்றது. மீதமுள்ள பணத்தில் தான் படத்தை எடுத்து முடித்தாக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர். அப்படி இருக்கும்போது படம் எந்த நிலைமையில் வெளியாகும் என்பதையும் யோசித்துப் பார்க்க வேண்டும். இதுதான் இங்கே இருக்கிற ஒரே பிரச்சனை என சொல்லப்படுகிறது.