ரிலீசான அல்லு அர்ஜுனை பார்த்து எமோஷனலான குடும்பம்!... முத்தமழை பொழிந்த மனைவி..!
அல்லு அர்ஜுன்:
தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்துள்ளது. அதிலும் புஷ்பா திரைப்படம் உலகம் எங்கிலும் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்து வருகின்றது. 2021 ஆம் ஆண்டு வெளிவந்த புஷ்பா என்ற திரைப்படத்தில் மிகச் சிறப்பாக நடித்து தேசிய விருது வாங்கியிருந்தார் அல்லு அர்ஜுன்.
அதனை தொடர்ந்து இப்படத்தின் 2-வது பாகம் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி வெளியானது. இந்த படத்திற்கும் ரசிகர்கள் தொடர்ந்து தங்களது ஆதரவுகளை கொடுத்து வருகிறார்கள். இதனால் படம் வெளியான 6 நாட்களிலேயே 1000 கோடி ரூபாயை கடந்து சாதனை படைத்திருக்கின்றது. தெலுங்கு மொழி மட்டுமில்லாமல் ஹிந்தி, தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
இளம்பெண் உயிரிழப்பு:
புஷ்பா 2 திரைப்படத்தை ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பிரீமியர் காட்சிகளுக்கு அரசு அனுமதி வழங்கியிருந்தது. இதனால் நள்ளிரவில் படம் திரையிடப்பட்டது. ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் பிரிமியர் காட்சியை பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு இருந்தார்கள். அப்போது அல்லு அர்ஜுன் காவல்துறைக்கு முன்னறிவிப்பு எதுவும் கூறாமல் படம் பார்ப்பதற்கு திடீரென்று தியேட்டருக்கு வந்திருக்கின்றார்.
அல்லு அர்ஜுனை பார்த்த ரசிகர்கள் ஆரவாரத்தில் ரசிகர்கள் மத்தியில் நெரிசல் ஏற்பட்டது. அப்போது படம் பார்க்க வந்திருந்த ரேவதி என்கின்ற ரசிகை பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகன் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். ரேவதியின் மரணத்திற்கு அல்லு அர்ஜுன் மற்றும் திரையரங்கு உரிமையாளர் தான் காரணம் என்று காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
அல்லு அர்ஜுன் கைது:
இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறை நேற்று அல்லு அர்ஜுனனை கைது செய்தனர். இது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட அல்லு அர்ஜுன் சஞ்சலகுடா சிறையில் நேற்று அடைக்கப்பட்ட நிலையில் உணவு எதுவும் சாப்பிட மறுத்துவிட்டார் என்றும், இரவு முழுவதும் வெறும் தரையில் தான் படுத்து தூங்கினார் என்றும் தகவல்கள் வெளியாகின. காலையில் அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் வழங்கிய ஜாமின் கிடைத்த பிறகு உடனடியாக அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
வரவேற்ற குடும்பம்:
ஜெயிலில் இருந்து வீடு திரும்பிய அல்லு அர்ஜுனனை மொத்த குடும்பமும் வாசலில் நின்று வரவேற்றது. நடிகர் அல்லு அர்ஜுனனுக்கு அயான் என்கின்ற மகனும் அரா என்கின்ற மகளும் இருக்கிறார்கள். அப்பா சிறையிலிருந்து வீடு திரும்பியதை பார்த்ததும் அவர்கள் ஹாப்பியாகி விட்டார்கள். அப்பாவை பார்த்ததும் குழந்தைகள் இருவரும் அவரை கட்டி அணைத்து மகிழ்ச்சி அடைந்தார்கள்.
இதைத் தொடர்ந்து அல்லு அர்ஜுன் சிறைக்கு சென்ற போது தனது மனைவி சினேகா ரெட்டிக்கு ஆறுதல் கூறிவிட்டு சென்றார். தற்போது அல்லு அர்ஜுன் சிறைக்கு சென்று திரும்பிய நிலையில் தனது கணவனை பார்த்ததும் கட்டிப்பிடித்து முத்து மழை பொழிந்து இருக்கின்றார் சிநேகா ரெட்டி. அதிக நேரம் கட்டிப்பிடித்து அவர் எமோஷனான காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி இருக்கிறது. அவரது மனைவி சினேகா ரெட்டியின் குடும்பத்தினர், அல்லு அர்ஜுன் குடும்பத்தினர் என அனைவரும் வீட்டு வாசலிலேயே நின்று அவரை சந்தோஷமாக வரவேற்றனர்.