கன்னட மொழி சர்ச்சை!.. தக் லைஃப் பட வசூல் பாதிக்குமா?.. தயாரிப்பாளர் சொன்ன ஷாக் நியூஸ்!..

தக் லைஃப் படத்தில் மணிரத்னம் இயக்கத்தில் 38 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைகிறார் கமல். இதுதான் ரசிகர்களுக்கு பெரிய ஹைப்பைத் தந்துள்ளது. ஏன்னா இவங்க முதல்ல இணைந்த படம் நாயகன். அது சூப்பர் டூப்பர் ஹிட். இப்போ இவர்களுடன் இணைந்துள்ளார் சிம்பு. அதனால் இன்னும் ஹைப் அதிகரித்துள்ளது. அப்புறம் ஏ.ஆர்.ரகுமான். இவரது இசையில் அத்தனைப் பாடல்களும் சூப்பர் ஹிட்.
இந்தப் படம் வரம் ஜூன் 5ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்த நிலையில் கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு. இதுகுறித்து பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் என்ன சொல்கிறார்னு பாருங்க.
தமிழகத்தில் மட்டும் 800 முதல் 900 ஸ்க்ரீன்ல தக் லைஃப் படம் வெளியாகிறது. கேரளாவிலும் 850 ஸ்க்ரீன்ல வெளியாகுமாம். ஓவர்சீஸ்ல 4 மணிக்கு படம் வெளியாகிறதுன்னு சொல்றாங்க.
தக் லைஃப் புரொமோஷன் எல்லாமே பர்பக்ட். பாடல்கள், டிரெய்லர், பர்ஸ்ட் லுக், காஸ்டிங், புரொமோஷன்னு எல்லாமே சூப்பர். ஓவர்சீஸ்ல சென்சார்ல பார்த்த ஒருவர் இந்தப் படம் மணிரத்னம் சாரின் ஒரு கிளாசிக்கல் கமர்ஷியல் படம். ஒரு ஐகானிக் படமாக இருக்கும்னு சொல்லிருக்காரு. ஆந்திரா, கேரளா, கொச்சி என எல்லாமே 2 சிட்டி, ஓவர்சீஸ்ல மலேசியா, துபாய்னு புரொமோஷன் பக்காவா பண்ணிருக்காங்க.
கர்நாடகாவில் இதுவரை பெரிய அளவில் கலெக்ஷன்னா 40 கோடி. அந்த வகையில் இந்தப் படம் 800 கோடி டார்க்கெட் பண்ணினா அதுல 30 கோடி கர்நாடகாவுல போகும்.
அந்த வகையில் 5-7 பர்சன்ட் வசூல் போறது லாஸ் தான். அதை விட முக்கியமா இந்தப் படத்தை ஒரு விநியோகஸ்தருக்கு 10 கோடி ரூபாய்க்குக் கொடுத்துருக்காங்களாம். இந்த பிரச்சனையால அவரு கொடுக்க மாட்டாருல்ல. அதை விட அங்குள்ள ரசிகர்கள் கமல், மணிரத்னம் படத்தைப் பார்க்கணும்னு ஆசைப்படுவாங்க.

அவங்க எல்லாரும் கிளம்பி சென்னைக்குத் தான் வரணும். அந்த வகையில் பாக்ஸ் ஆபீஸ்ல லாஸ். ஆடியன்ஸ்சுக்கு லாஸ். இது வந்து ஒரு சின்ன ஈகே விஷயம் அல்ல. பல பேருக்கு லாஸ் ஆகப் போகுது. கமல் சார் நான் எந்த வகையிலுமே கன்னடத்தைக் குறைச்சி சொல்லல.
தமிழ் தான் மூத்த மொழி என்பது பல ஆராய்ச்சியாளர்கள் சொன்ன விஷயம் என்ற கண்ணோட்டத்தில்தான் சொன்னார். அதனால இன்னும் 48 மணி நேரம் இருக்கு. அதனால இந்தப் பிரச்சனையை சுமூகமாகக் கொண்டு வருவாங்கன்னு எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.