கமல் மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கிறாரா? பிரபலம் சொல்லும் புதுத்தகவல்

by Sankaran |
kamal
X

கமல் தற்போது அமெரிக்கா சென்று ஏஐ டெக்னாலஜியைப் படித்து விட்டு திரும்பி இருக்கிறார். தக் லைஃப் படத்தின் ரிலீஸ் தேதியை ஜூன் 5 என அறிவித்தார். இந்தப் படத்தை மணிரத்னம் இயக்குகிறார். நாயகன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இந்தப் படத்தை இயக்குவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.


தக் லைஃப்: மேலும் இந்தப் படத்தில் அவருடன் சிம்புவும் இணைந்து நடிக்கிறார். படத்தில் சண்டைக்காட்சிகள் எல்லாமே பிரமாதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தக் லைஃப் படத்தில் கமலுக்கு கேங்ஸ்டர் ரோலாம். சிம்பு அவரது வளர்ப்பு மகன். அவரது ஜோடி திரிஷா. இந்தப் படத்தில் அபிராமி, நாசர், வையாபுரி உள்பட பலரும் நடித்துள்ளனர்.

ஷங்கரின் இயக்கத்தில் கடந்த வருடம் இந்தியன் 2 படம் அவருக்கு பெரிய அளவில் வரவேற்பைப் பெறாமல் போனது. அதே நேரம் அவர் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படம் வசூலில் சக்கை போடு போட்டது.

அன்பறிவு, விக்ரம் 2: தொடர்ந்து இந்த ஆண்டு அவருக்கு தக் லைஃப், இந்தியன் 3 படங்கள் உறுதியாக வெளியாகும் என்று தெரிகிறது. அடுத்ததாக பிரபல சண்டைக் கலைஞர்களான அன்பறிவு இயக்கும் படத்தில் கமல் நடிக்க உள்ளார். விக்ரம் 2 படம் இல்லையா என பத்திரிகையாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பியபோது தான் ஒரு புதிய கதையை எழுதி வந்திருப்பதாகவும் கூறினார்.

இயக்குனர் அவதாரம்: இந்தநிலையில் ரசிகர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கமல் அடுத்து படம் இயக்க வாய்ப்பு உள்ளதா என்றும் அப்படி இயக்கினாருன்னா அவர் எடுக்கிற திரைப்படம் எந்தமாதிரியான கதைகளம் கொண்டதாக இருக்கும் என்று கேட்டுள்ளார். அதற்கு அவர் அளித்த பதில் இதுதான். இப்போதைக்கு கமல் மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகவே உள்ளது என்றார்.

Next Story