எனக்கு எத்தன பேரு பணம் கொடுக்கணும்னு லிஸ்ட் போடட்டுமா? கொந்தளித்த யோகிபாபு

by ROHINI |
yogibabu
X

yogibabu

yogibabuYogibabu:தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக தற்போது ஜொலித்து வருபவர் நடிகர் யோகி பாபு. சின்ன படங்களில் இருந்து பெரிய பட்ஜெட் படங்கள் வரைக்கும் மிகவும் பிசியான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கின்றார் யோகி பாபு. நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா படத்தில் நடித்த பிறகு பட்டி தொட்டி எங்கும் இவருடைய நடிப்பும் காமெடியும் பரவியது. அதிலிருந்து தற்போது ஜெயிலர் 2 திரைப்படம் ஒரு முக்கிய கதாபாத்திரமாக எல்லா படங்களிலும் நடித்து வருகிறார் யோகி பாபு. இன்று அவர் நடித்த ஜோரா கையை தட்டுங்க திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த படத்தை விநீஷ் மில்லினியம் என்பவர் இயக்கி இருக்கிறார். வாமா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. இதில் யோகி பாபு டன் இணைந்து மணிமாறன், சாந்தி தேவி உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய யோகி பாபு அவருடைய மொத்த ஆதங்கத்தையும் கொட்டி தீர்த்து இருக்கிறார். இதோ அவர் கூறியது: இயக்குனர் வினீஷ் 15 வருடங்களுக்கு முன்பு பிரஜனை வைத்து ஒரு படத்தை இயக்கி இருந்தார்.

அந்தப் படத்தில் எனக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுத்து ஒரு கேரக்டரில் நடிக்க வைத்தார். அதன் பிறகு ஐந்து வருடங்கள் கழித்து என்னை தொடர்பு கொண்டார் வினீஷ். அவருடைய குரலை கேட்டதுமே சொல்லுங்க சார் நல்லா இருக்கீங்களா என்றுதான் கேட்டேன். அது அவருக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை கொடுத்தது. அதன் பிறகு வாங்க பேசலாம் என்று அவரை அழைத்த பிறகு தான் இந்தப் படத்தின் ஒன்லைன் கதையை என்னிடம் சொன்னார். சரி டெவலப் பண்ணுங்க, நான் நடிக்கிறேன் எனக் கூறி தான் இந்த படத்தில் நான் நடித்தேன்.

இந்த விழாவிற்கு வருகை தந்த அத்தனை பேருக்கும் நன்றி. தனஞ்செயன், கலைப்புலி எஸ் தாணு ஆகியோர் இந்த படத்தை நல்ல முறையில் கொண்டு போவதற்கு உதவி இருக்கிறார்கள். அவர்களுக்கும் நன்றி. சம்பளத்தை அதிகமாக வாங்காதீங்க. குறைவா வாங்குங்கள் என சொல்கிறீர்கள். நாங்க எங்க சார் சம்பளத்தை நிர்ணயம் செய்கிறோம். வெளியில் உள்ளவர்கள் தான் எங்களுடைய சம்பளத்தை நிர்ணயம் செய்கிறார்கள். நான் என்ன சம்பளம் வாங்குகிறேன் என்று எனக்கே தெரியாது. இப்படித்தான் போய்க்கொண்டிருக்கிறது.

ஒன்னு பண்ணுங்க. நீங்களே சம்பளத்தை பிக்ஸ் பண்ணுங்க. ஆனால் அந்த சம்பளத்தை நீங்களே எங்களுக்கு வாங்கி கொடுங்க. நல்ல கதை இருந்தால் நீங்களே சம்பளத்தை முடிவு பண்ணிவிட்டு எங்களிடம் அனுப்புங்கள். நான் இந்த மேடையில் பெரிய ஆளுங்க முன்னாடி ஒன்னு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். எனக்கு எத்தனை பேரு பணம் தர வேண்டும் என தெரியுமா?

யார் யாரெல்லாம் பணம் கொடுக்க வேண்டும் என லிஸ்டு போடட்டுமா? ஆனால் அது வேண்டாம். இதை இப்படியே விட்டு விடுவோம். எனக்கு உதவியாளராக இருந்த ஒருத்தர் ஹீரோவாக நடிக்கிறேன். எனக்கு சப்போர்ட் பண்ணுங்க என்று சொல்லி அவருடைய படத்தில் நடிக்க சொன்னார். நானும் நடித்துக் கொடுத்தேன். ஆனால் அவர்கள் தான் 7,00,000 கொடுத்தால் தான் யோகி பாபு வருவார் என சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.

yogibabu

தயவு செய்து அப்படி எல்லாம் பேசாதீங்க. நாங்கள் சப்போர்ட் பண்ணிக் கொண்டுதான் இருக்கிறோம். இன்று 40 கோடி 50 கோடி வாங்கும் இயக்குனர்கள் எல்லாம் எந்த இடத்தில் இருந்து வந்திருக்கிறார்கள் என்பதையும் யோசிக்க வேண்டும். சாதாரணமாக வரவில்லை.அதனால் இப்படி பேசாதீங்க. இன்று கூட எனக்கு 6.30 மணிக்கு ஃபிளைட் என கூறி மேடையிலிருந்து கிளம்பினார்.

Next Story