இவருக்குள் இப்படியொரு வாய்ஸா? ‘ரோஜா ரோஜா’ பாடலை பாடி அசத்திய யோகிபாபு
தமிழ் சினிமாவில் காமெடியில் ஒரு முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் யோகிபாபு. ஆரம்பத்தில் ஸ்டண்ட் கலைஞராகத்தான் இருந்தார். அதன் பிறகு சின்ன சின்ன வேடங்களில் நடிக்க ஆரம்பித்து பிறகு காமெடியில் முன்னணி நடிகராக வலம் வந்தார். அதிலிருந்தே பெரும்பாலான படங்களில் யோகிபாபுவின் காமெடிதான் வொர்க் அவுட் ஆகி வந்தது.
ஆனால் சமீபகாலமாக அவருடைய காமெடியில் முன்பிருந்த சுவாரஸ்யம் இல்லை என்பதே பலரின் கருத்தாகவும் இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் மற்றவர்களிடம் அவர் நடந்துகொள்ளும் விதமும் யாருக்கும் பிடிக்கவில்லை. மேலும் சம்பளம் என்கிற பெயரில் அவர் பெருந்தொகையை வாங்கிக் கொள்கிறார் என்றும் தன்னுடைய உதவியாளர்களுக்கும் சேர்த்து சம்பளம் வாங்கினாலும் அது முழுமையாக உதவியாளர்களிடம் போய் சேர்வதில்லை என்றும் சொல்லப்படுகிறது.
புரோமோஷனுக்கு அழைத்தாலும் அதற்கும் ஒரு பெருந்தொகையை அவர் கேட்கிறார் என்றும் விமர்சனம் வைக்கப்படுகிறது. சொல்லப்போனால் பெரிய நடிகர்கள் நடிகைகளை போல யோகிபாபுவும் சின்ன படங்களின் புரோமோஷனில் கலந்து கொள்வதே இல்லை. இதுவே கோடம்பாக்கத்தில் அவர் மீது பெரிய அதிருப்தி ஏற்பட காரணமாக இருக்கிறது.
இந்த நிலையில் யோகிபாபுவின் ஒரு வீடியோ சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகின்றன. சமீபத்தில் ரோஜா ரோஜா பாடல் பெரிய அளவில் ஃபேமஸ் ஆனது. அதற்கு காரனம் மகாலிங்கம் அந்த பாடலை ஒர் மேடையில் பாட அவருடைய வாய்ஸ் மிகவும் இனிமையாக இருக்க ‘இப்படியொரு வாய்ஸா’ என்று அனைவருமே மகாலிங்கத்தை டேக் செய்து ரோஜா ரோஜா பாடலையும் மகாலிங்கத்தையும் டிரெண்டிங்கில் போய் நிறுத்தினார்கள்.
இதற்கு பிறகு மகாலிங்கத்திற்கு புதிய படங்களில் பாட வாய்ப்புகள் வரத் தொடங்கியது. அதே போல் ரோஜா ரோஜா பாடலை இப்போது யோகிபாபு பாடியிருக்கிறார். பார்க்கத்தான் ஆளு முரட்டுப்பாயாக இருக்கிறார். ஆனால் அவருடைய குரல் மிகவும் இனிமையாக இருக்கின்றது. அந்த வீடியோதான் இப்போது வைரலாகி வருகின்றது.
