abishek
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டுள்ள அபிஷேக் Fully Filmy எனும் யூடியூப் சேனலில் விமர்சகராக இருந்து பிரபலமானார். கமல், விஜய் சேதுபதி என பிரபலங்களை நேர்காணல் எடுத்தும் பிரபலமானார். தொடர்ந்து திரைப்பட விமர்சகராவும் இருந்த இவர் கல்லூரிகளுக்கு கெஸ்ட்டாகவும் சென்றிருக்கிறார்.
இந்நிலையில் பிக்பாஸில் போட்டியாளராக சீசன் 5ல் கலந்துக்கொண்டுள்ளார். அவரை கமல் நேற்று வாழ்த்தி உள்ளே அனுப்பிய நிலையில் இன்று கமலை குறித்து விமர்சித்து பேசிய அபிஷேக்கின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது.
அந்த வீடியோவில்… ஊருக்கே தெரியும்டா உங்களை கேமரா வச்சு எடுத்துக்கிட்டு இருக்காங்கனு. ஆனால் கிடைச்ச 100 நாள்ல நீ தமிழ்நாடு சி.எம். ஆகணும்னு பண்ற வேலைலாம் இருக்கு தெரியுமா?. முடியலடா என்னால, கேட்டால் பிக் பாஸுங்கிறீங்க என்று கமலை திட்டி தீர்த்துள்ளார். தற்போது அதே பிக்பாஸில் நுழைந்துள்ளார். அபிஷேக் பேசிய வீடியோவை கமலுக்கு டேக் செய்து இது என்னணு பாருங்க ஆண்டவரே என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். அடுத்த வீக் என்டில் கமலே அபிஷேக்கிடம் இதை குறித்து கேட்பார் என எதிர்பார்க்கலாம்.
சர்ச்சை நாயகன்…
Ajith Vijay:…
OTT-யில் புதிய…
சிம்புவுடன் இணைந்த…
வடிவேலுவின் கோபம்…