அய்யோ அந்த இயக்குனரோட ஒரே கோளாறுதான்!.. இப்படி யுவனையே புலம்பவிட்டீங்களே!..
Yuvan shankar raja: உலகம் முழுவதும் இருக்கும் ரசிகர்களால் இசைஞானி என்று அழைக்கப்படுபவர் இளையராஜா. இவரது இசையில் வெளிவந்த பல பாடல்கள் தற்போது வரை ரசிகர்களின் ஃபேவரட்டாக இருந்து வருகின்றது. சினிமா மட்டும் இல்லாமல் சிம்பொனி உள்ளிட்ட மற்ற முயற்சிகளிலும் தன்னை நிரூபித்தவர் இளையராஜா.
இவரது மகன்கள் யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா மற்றும் மகள் பவதாரணி. இதில் இளைய மகன் யுவன் சங்கர் ராஜா. தமிழ் சினிமாவில் தனது தந்தையைப் போல பிரபல இசையமைப்பாளராக வலம் வருகின்றார். இவரது இசையில் வெளிவந்த பல பாடல்கள் 90ஸ் கிட்ஸ்களின் பேவரட் லிஸ்டில் கட்டாயம் இருக்கும். அப்படி தனது பாடல்களால், அதிலும் காதல் பாடல்களால் உருக வைத்தவர் யுவன் சங்கர் ராஜா.
சமீப காலமாக பெரியளவு படங்களில் இசையமைக்காமல் இருந்து வந்த யுவன் சங்கர் ராஜா கடைசியாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான கோட் திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், படத்தின் பிஜிஎம்-ஐ கொண்டாடி வருகிறார்கள்.
இதனை தொடர்ந்து அடுத்ததாக விஷ்ணுவர்தன் இயக்கியிருக்கும் நேசிப்பாயா என்கின்ற திரைப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் மிகச் சிறப்பாக வந்திருக்கின்றது. இப்படத்தில் மறைந்த நடிகர் முரளியின் இளைய மகன் ஆகாஷ் முரளியும், அதித்தி சங்கரும் நடித்திருக்கிறார்கள்.
முழுக்க முழுக்க ஒரு காதல் படமாக இப்படம் உருவாகி இருக்கின்றது. காதல் படம் என்றாலே யுவன் சங்கர் ராஜா இசை மிகச் சிறப்பாக இருக்கும். அந்த வகையில் இப்படத்தின் பாடல்கள் நிச்சயம் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக இருக்கும் என்று கூறி வருகிறார்கள். படம் ரிலீசுக்கு இன்னும் சிறிது நாட்கள் இருப்பதால் படக்குழுவினர் தொடர்ந்து புரமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட யுவன் சங்கர் ராஜா பேசி இருப்பது இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.
அவர் எந்த இயக்குனரை குறிப்பிட்டு பேசுகிறார் என்று தெரியவில்லை. அதில் அவர் தெரிவித்திருந்ததாவது 'சினிமாவில் சில இயக்குனர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு என்ன வேண்டும் அதாவது எந்த மாதிரியான பாடல் வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியாது. சரி நாமாக ஒரு பாடலை கொடுத்தாலும், அதையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இது இல்ல, இப்படி வேண்டாம், வேறு மாதிரி வேண்டும் என்று கூறுவார்கள்.
சரி என்ன மாதிரி வேண்டும் என்று நீங்கள் கூறுங்கள் என்றால் அதற்கும் தெரியாது என்று பதில் கூறுவார்கள். எனக்கு அந்த சமயத்தில் கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் இருக்கும். நான் கொடுக்குறதையும் வேணாம்னு சொல்றீங்க, நீங்களாவும் எதையும் சொல்ல மாட்டேங்கறீங்க. எப்படி தான் பாட்டு எழுதுவது என குழப்பமாக இருக்கும். அப்படி சில இயக்குனர்கள் இருக்கிறார்கள்' என்று புலம்பி இருக்கின்றார்.
இதை பார்த்து ரசிகர்கள் பலரும் யுவன் சங்கர் ராஜா இயக்குனர் ஹெச் வினோத்தை தான் கூறுகின்றார் என்று பேசி வருகிறார்கள். இவர்கள் இருவரது கூட்டணியில் கடைசியாக வெளியான திரைப்படம் வலிமை. அந்தப் படத்தில் இடம் பெற்றிருந்த பாடல்களும் பெரிய அளவிற்கு ஹிட் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.