என்னுடைய பாட்ட நானே கேட்க மாட்டேன்!.. இப்படி ஓப்பனா சொல்லிட்டாரே யுவன்!...

by Murugan |
yuvan
X

Yuvan Shankar Raja: இசைஞானி இளையராஜாவின் இளையமகன் யுவன் சங்கர் ராஜா. மிகவும் சிறிய வயதிலேயே சரத்குமார் நடித்த அரவிந்தன் என்கிற திரைப்படம் மூலம் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். முதல் படத்திலேயே இவரின் இசை ரசிகர்களுக்கு பிடித்திருந்தது. அந்த படத்தில் இடம் பெற்ற ‘ஈர நிலா’ என்கிற பாடல் நல்ல மெலடியாக அமைந்தது.

அதன்பின் பல படங்களிலும் இசையமைத்து பல ஹிட் பாடல்களை கொடுத்திருக்கிறார். குறிப்பாக தனுஷ், சிம்பு மற்றும் அஜித்தின் சில படங்களில் இவர் கொடுத்த இசை ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. அதிலும், செல்வராகவனின் இயக்கத்தில் உருவான துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை ஆகிய படங்கள் அற்புதமான பாடல்களை கொடுத்திருந்தார்.

சிம்புவுக்கு மன்மதன் படத்திலும், அஜித்துக்கு பில்லா, தீனா மற்றும் மங்காத்தா போன்ற படங்களில் ஹிட் பாடல்களை கொடுத்தாலும். பில்லா மற்றும் மங்காத்தா ஆகிய படங்களில் அஜித்துக்கு யுவன் போட்ட பின்னணி இசை மற்றும் தீம் மியூசிக் ஆகியவை அஜித் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக இருக்கிறது.


திறமையான இசையமைப்பாளராக இருந்தும் யுவனால் முன்னணி இசையமைப்பாளராக மாற முடியாமல் போனதற்கு காரணம் அவர் மட்டுமே. அதாவது யுவன் பேசிக்கலி சோம்பேறி. ஒரு படத்திற்கு இசையமைத்து கொடுக்க பல மாதங்கள் எடுத்துக்கொள்வார். அதோடு, அவரை தொடர்பு கொள்வதே கடினம். இதனால்தான், பல இயக்குனர்கள் அவரின் பக்கம் போவதை நிறுத்திவிட்டார்கள்.

ஏ.ஆர்.ரஹ்மான் சினிமாவில் இசையமைக்க துவங்கி ரோஜா, ஜென்டில்மேன், காதலன் என ஹிட் பாடல்களை கொடுத்தபோது ‘உங்க அப்பா அவ்வளவுதான். இனிமேல் ரஹ்மான்தான்’ என யுவனிடம் அவரின் நண்பர்கள் சொல்ல, பைலட் ஆக வேண்டும் என்கிற ஆசையை விட்டுவிட்டு ‘அப்பாவின் வாரிசாக நாம் வரவேண்டும்’ என முடிவெடுத்து இசையமைப்பாளராக மாறியவர்தான் யுவன்.

சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய அவர் ‘என்னுடைய பாடல்கள் எதையும் நான் கேட்க மாட்டேன். ஏனெனில் நான் இசையமைத்த பாடல்கள் எது எனக்கு பிடித்தமான ஒன்று என இப்போதுவரை தேடிக்கொண்டிருக்கிறேன். அப்படி தேடினால்தான் புதிய பாடல்களை உருவாக்க முடியும். இதுதான் என்னுடைய சிறந்த பாடல் என சொல்லுமளவுக்கு நான் இன்னும் கன்வின்ஸ் ஆகவில்லை’ என சொல்லியிருக்கிறார்.

Next Story