புரட்சித்தளபதி தளபதி ஆக வேண்டாமா? ஆசையை தூண்டி விஷாலின் அரசியலுக்கு முட்டுக்கட்டை போட்ட பிரபலம்

by Rohini |
vishal
X

vishal

Actor Vishal: மார்க் ஆண்டனி வெற்றிக்கு பிறகு விஷால் நடிக்கும் திரைப்படம் ‘ரத்னம்’. இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். படத்தை ஹரி இயக்கியிருக்கிறார். கோலிவுட்டில் வேகத்திற்கு பேர் போன இயக்குனர் என்றால் அது ஹரிதான். அதுவும் அவர் எடுத்த பெரும்பாலான படங்கள் ப்ளாக் பஸ்டர் ஹிட்டாகியிருக்கின்றன.

அந்த வகையில் இப்போது விஷாலுடன் இணைந்திருக்கும் ரத்னம் திரைப்படமும் பெரிய அளவில் எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கின்றன. இந்தப் படமும் ஹரியின் வழக்கமான ஃபார்முலாவிலேயே அமைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. ரத்தம் , வெட்டுக் குத்து என படமுழுக்க வன்முறை காட்சிகள் இருப்பதாகவே டிரெய்லரை பார்க்கும் போது தெரிகிறது.

இதையும் படிங்க: இமான் வருவதற்குள் போய்விட்டார் அமரன்!.. எஸ்.கே.வை கலாய்த்த பிரபலம்!.. இது செம நக்கல்யா!..

இந்த நிலையில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர். அதில் சினிமா தயாரிப்பாளர் தனஞ்செயன் விஷாலிடம் ஒரு வேண்டுகோளை விடுத்தார். அதாவது இப்போதுதான் மார்க் ஆண்டனி என மிகப்பெரிய ப்ளாக் பஸ்டர் ஹிட்டை கொடுத்திருக்கிறீர்கள். அதன் பிறகு ரத்னம் படம் ரிலீஸாக காத்துக் கொண்டிருக்கிறது.

ஏற்கனவே விஜய் அரசியலுக்குள் இறங்கி விட்டார். இப்போது நீங்களும் அரசியலுக்கு வருவது சரில்லை. இன்னும் கொஞ்ச நாளில் சினிமாவில் வெற்றிடங்கள் காலியாக வாய்ப்புள்ளது. அதை உங்களை போன்ற நடிகர்களால்தான் நிரப்ப முடியும். நீங்களும் அடுத்த கட்டத்திற்கு அதாவது 300 கோடி, 500 கோடி என போக வேண்டும். அதனால் அரசியல் உங்களுக்கு வேண்டாம் என தனஞ்செயன் மிகவும் பணிவுடன் வேண்டுகோள் விடுத்தார்.

இதையும் படிங்க: பலாப்பழம் பச்சையாதான இருக்கும்.. ஏன் கருப்பா இருக்கு? அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மன்சூர்

dhana

dhana

இதில் இருந்து விஷால் அவருடைய வேண்டுகோளை ஏற்பாரா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இப்போதைக்கு அவர் நடித்திருக்கும் ரத்னம் திரைப்படம் வரும் 26 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.

Next Story