More
Categories: Cinema News latest news

உச்சத்தில் இருந்தும் தனது வாயால் கெட்டு குட்டிச்சுவரான டாப் நடிகர்கள்…லிஸ்ட் பெருசா இருக்கே…

சினிமாவில் தனது கடுமையான உழைப்பால் உச்சத்திற்கு சென்றாலும் சில முன்னணி நடிகர்கள் தனது மோசமான நடத்தையால் சரிவை கண்ட சம்பவங்கள் பல உண்டு. அந்த வகையில் மக்களின் மனதை கவர்ந்து உச்சத்தில் இருந்த சில நடிகர்கள் தனது மோசமான நடத்தையாலும் வாயாலும் கெட்ட சம்பவங்களை பார்க்கலாம்.

சிம்பு:

Advertising
Advertising

பிரபல இயக்குனர் டி.ராஜேந்தரின் மகனான சிலம்பரசன் குழந்தையாக இருக்கும்போதே நடிக்க தொடங்கிவிட்டார். அதனை தொடர்ந்து “காதல் அழிவதில்லை” என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். மேலும் “லிட்டில் சூப்பர் ஸ்டார்” என்ற டைட்டிலையும் தனதாக்கிக்கொண்டார்.

“மன்மதன்”, “வல்லவன்”, “விண்ணைத்தாண்டி வருவாயா” என டாப் கியரில் சென்றுகொண்டிருந்த அவரின் கேரியர் அவரது மோசமான நடத்தையால் சரிவை கண்டது.

சில வருடங்களுக்கு முன்பு நயன்தாராவை காதலித்து வந்த சிம்பு, அவருடனான பிரிவை தொடர்ந்து ஹன்சிகா மோத்வானியுடன் நெருங்கி பழக தொடங்கினார். ஆனால் அந்த காதலும் தோல்வியில் முடிந்த நிலையில் நடிப்பின் மீதான கவனம் சிதறி, தான் இமயமலையில் சாமியாராக போகப்போவதாக கூறிவந்தார்.

இதன் விளைவு அவர் நடித்த எந்த படப்பிடிப்பிற்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் இருந்தார். நேரத்திற்கு படப்பிடிப்பிற்கு வராமல் இருப்பது, நடிப்பதாக கூறி ஒப்பந்தம் செய்து அதன் பின் வாக்கு மீறுவது, டப்பிங்கிற்கு வராமல் இருப்பது என பல மோசமான நடத்தைகளில் ஈடுபட்டார்.

இதனால் சில தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. எனினும் தன்னுடைய நடத்தையால் நிகழ்ந்த நஷ்டங்களை உணர்ந்த சிம்பு, அதன் பின் தனது உடலை மெருகேற்றி மீண்டும் நடிக்க வந்தார். தற்போது வெற்றிகரமாக பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

வடிவேலு:

தமிழ் மக்களை தனது நகைச்சுவையால் கவர்ந்திழுத்த நடிகர் வடிவேலு, கடந்த 2011 ஆம் ஆண்டு ஆச்சரியப்படும் சம்பவம் ஒன்றை செய்தார். அதாவது 2008 ஆம் ஆண்டு அவரது வீட்டில் கல் எறி தாக்குல் நடத்தப்பட்டது. இந்த கல் எறி தாக்குதலை தொடர்ந்து வடிவேலு விஜயகாந்தின் மீது புகார் அளித்தார். அதற்கு முன் விஜயகாந்திற்கும் அவருக்கும் பல பிரச்சனைகள் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு விஜயகாந்தை தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என நினைத்த வடிவேலு, திமுகவிற்கு ஆதரவாக செயல்பட்டார். பிரச்சாரத்திற்காக ஒவ்வொரு ஊருக்கும் சென்ற வடிவேலு, விஜயகாந்த்தை மிகவும் மோசமாக விமர்சனம் செய்தார். ஆனால் இந்த சம்பவம் அவருக்கே வினையாக முடிந்தது. அந்த தேர்தலில் திமுக வரலாறு காணாத தோல்வியை கண்டது. அதன் பின் இடைப்பட்ட காலத்தில் வடிவேலு காணாமல் போனார்.

அதன் பின் சில திரைப்படங்களில் தென்பட்ட வடிவேலு, “இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி” என்ற திரைப்படம் தொடங்கியபோது தனது கெத்தை காட்டுகிறேன் என்ற பெயரில் திரைப்படப் பணிகளில் தலையிட ஆரம்பித்தார். யார் யார் நடிக்க வேண்டும், யார் யார் நடிக்க கூடாது என அவர் முடிவு செய்ய தொடங்கினார். இதனால் அத்திரைப்படம் அப்படியே முடங்கியது. மேலும் இதனை தொடர்ந்து வடிவேலு நடிப்பதற்கு தடையும் விதிக்கப்பட்டது. இதனை எல்லாம் கடந்து தற்போது வடிவேலு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

சுதாகர்:

தமிழில் “கிழக்கே போகும் ரயில்”, “மாந்தோப்பு கிளியே”, “கல்லுக்குள் ஈரம்” போன்ற பல வெற்றித் திரைப்படங்களில் நடித்து ரஜினி கமலுக்கு டஃப் கொடுத்த நடிகர் சுதாகர். தமிழ், தெலுங்கு என உச்சத்தில் இருந்த சுதாகர் போதை பழக்கத்திற்கும், குடி பழக்கத்திற்கும் அடிமையானார்.

இதனால் படப்பிடிப்புக்கு பங்கம் விளைந்தது. படப்பிடிப்பிற்கு மது அருந்துவிட்டு வருவது, கலாட்டா செய்வது போன்ற மோசமான விஷயங்களில் ஈடுபட்டார். இதனால் டாப் கதாநாயகனாக இருந்த சுதாகர், காமெடி நடிகராக மாறிப்போனார்.

சுமன்:

நடிகர் சுமன் 1908களில் தமிழில் “இளமை கோலம்”, “கடல் மீன்கள்” போன்ற பல திரைப்படங்களில் நடித்தவர். தமிழின் முன்னணி நடிகராக வளர்ந்து வந்த இவர் பெண்கள் விஷயத்தில் மோசமாக நடந்துகொண்டாதாக பேச்சுக்கள் அடிபடுகின்றன. மேலும் குடிப்பழக்கத்திற்கும் அடிமையானார். இதனால் இவரது கேரியர் சரிவை கண்டது. எனினும் அதன் பின் நெடுங்காலம் கழித்து “சிவாஜி” திரைப்படத்தில் வில்லனாக நடித்தார்.

என்னதான் நடிப்பில் உச்சத்தை தொட்டாலும் ஒழுக்கம், அவையடக்கம், நன்னடத்தை ஆகியவை இல்லை என்றால் எப்படிப்பட்ட துன்பமும் நேரும் என்பதற்கு இது போன்ற சில நடிகர்கள் உதாரணமாக இருக்கிறார்கள்.

Published by
Arun Prasad

Recent Posts