latest news

உனக்கு ஏன்டா இந்த வேலை?!.. கமலை திட்டிய சிவாஜி!.. தேவர் மகன் பிளாஷ்பேக்!..

நடிகர் கமல்ஹாசன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்து நடித்து வெளியான திரைப்படம் தேவர் மகன். கமலின் சினிமா கெரியரில் இது முக்கியமான படமாக பார்க்கப்படுகிறது. இந்த படத்தை மலையாள பட இயக்குனர் பரதன் இயக்கியிருந்தார். 1992ம் வருடம் தீபாவளிக்கு வெளியான இந்த திரைப்படம் கமலுக்கு ஒரு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.

ஊருக்குள் பெரிய தேவராக இருக்கும் சிவாஜியின் மகனாக கமல் சொந்த ஊருக்கு வருவார். அப்பாவின் மறைவுக்குப் பின் அந்த ஊரிலேயே தங்கி சாதி மோதல்களுக்கிடையே மக்களை பாதுகாப்பதுதான் படத்தின் கதை. இந்த படத்தில் இடம்பெற்ற வசனங்கள் இப்போதும் சிலாகிக்கப்படுகிறது.. இந்த படத்தை பார்த்து இயக்குனராக வேண்டும் என்கிற ஆசை பலருக்கும் வந்தது..

இந்த படத்தில் கமலின் தந்தையாக சிவாஜி கணேசன் அசத்தலான நடிப்பை கொடுத்திருந்தார்.. இந்நிலையில், இந்த படத்தில் உதவி ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த ராம்ஜி சமீபத்தில் ஊடகம் ஒன்று பேசியபோது ஒரு முக்கிய தகவலை பகிர்ந்து கொண்டார்..

‘ஷூட்டிங்கிற்கு சிவாஜி சார் முதலில் வந்து விடுவார்.. மேக்கப் போட்டுக் கொண்டு அமைதியாக கண் மூடி அப்படியே படுத்திருப்பார்.. வெளியே சலசலப்பு சத்தம் கேட்டதும் ‘கமலா வந்துவிட்டானா?’ என கேட்பார்.. ஒருமுறை கமல் சார் உள்ளே வந்ததும் ‘என்னடா இந்த நேரத்துக்கு வர?’ என கேட்டார். ‘இல்லப்பா நைட் ஃபுல்லா படத்துக்கு வசனம் எழுதிட்டிருந்தேன்’னு கமல் சொல்லுவார் அதற்கு ‘உனக்கு எதுக்குடா இந்த வேலை?.. அதான் டைரக்டர் இருக்கான்ல.. அவன் எழுதட்டும்.. நைட் ஃபுல்லா கண் முழிச்சா காலைல கேமரா நம்ம முகத்ததான காட்டும்.. உன் முகம் டயர்டா இருந்தா நல்லாருக்குமா?’ என்று கேட்பார்..

கமல் எதையே சொல்லி சமாளிப்பார். சிவாஜி சார் ஒரு காட்சி நடித்துவிட்டு இயக்குனர் முகத்தை பார்ப்பார்.. அவருக்கு திருப்தி இல்லை என்பதை அவரே புரிந்துகொண்டு இயக்குனரை அழைத்து ‘உனக்கு என்ன வேண்டும்?’ என கேட்பார். அதன்பின் அவர் ஒன்று சொல்லுவார்.. ஆனால் அதைவிட சிறந்ததாக சிவாஜி சார் என்று செய்து காட்டுவார்.. ஒரு விஷயம் எப்படி சினிமாவாக மாறுகிறது என்பதை நான் அங்குதான் கற்றுக் கொண்டேன்’ என ராம்ஜி சொல்லியிருக்கிறார்..

சிவா

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மின் அஞ்சல் முகவரி mugas123@gmail.com

Recent Posts

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

6 hours ago

கலைஞர் குடும்பத்தை பார்த்து அரசியலுக்கு வர ஆசைப்பட்ட விஜய்!.. பிடி செல்வகுமார் ஓபன்..

நடிகர் விஜய் இப்போது அரசியல்வாதியாக மாறியிருக்கிறார். அவரின் தமிழக வெற்றிக் கழகம் விரைவில் சட்டமன்ற தேர்தலில் சந்திக்கப்போகிறது. அரசியல்வாதியாக விஜய்…

9 hours ago

அரசன் படத்துக் கதை இதுதாங்க… சிவகார்த்திகேயன் படத்தோடு சிம்பு மோதுகிறாரா?

நடிகர் சிம்பு தற்போது நடித்து வரும் அரசன் படத்தை வெற்றி மாறன் இயக்கி வருகிறார். அனிருத் இசை அமைத்துள்ளார். இதே…

10 hours ago

இயக்குனர் பாரதிராஜா எப்படி இருக்கிறார்?!.. வெளியான போட்டோ!…

பதினாறு வயதினிலே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவர் பாரதிராஜா. அதன்பின் தொடர்ந்து பல திரைப்படங்களை இயக்கி…

1 day ago

யோகிபாபுவின் அட்ராசிட்டி!.. கண்டிக்காத ரஜினி!.. ஜெயிலர் 2 ஷூட்டிங்கில் நடந்தது என்ன?..

தமிழ் சினிமாவில் தற்போது விவேக் இல்லை. கவுண்டமணி நடிப்பதில்லை.. வடிவேலுக்கு ரிட்டயர்ட் ஆகும் வயதாகிவிட்டது. அதோடு, அவரின் காமெடியும் எடுபடவில்லை.…

1 day ago

Siragadikka Aasai: ரோகிணிக்கு செம செக் வைத்த முத்து, மீனா… இதாவது ஜெயிக்குமா?

Siragadikka aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரின் இன்றைய எபிசோட்டில் ரோகிணிக்கு எதிராக சரியான காயை…

1 day ago