Vijay & Ajith: அஜித் மாறி செம ஸ்டைலா ஓட்டுறாரே விஜய்!.. வைரல் வீடியோ!..

X
Vijay & Ajith: அஜித் மாறி செம ஸ்டைலா ஓட்டுறாரே விஜய்!.. வைரல் வீடியோ!..

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் லண்டன் சென்றிருக்கும் நிலையில் நேற்று லண்டனில் நடைபெற்ற சில்வர் ஸ்டோன் கார் ரேசிங் நடைபெற்ற இடத்தில் விஜயும், அஜித்தும் சந்தித்துக்கொண்ட புகைப்படங்களும். வீடியோக்களும்தான் நேற்று மாலை முதலே சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் சில நாட்களுக்கு முன்பு தமிழகத்திலும் மோட்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டை கொண்டு வருவோம் அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என சட்டசபையில் பேசியிருந்தார். இதற்கு மோட்டார் ஸ்போர்ட்ஸ் கார் ரேஸரான அஜித் நன்றி கூறியிருந்தார்..

நேற்று லண்டனில் நடைபெற்ற சில்வர் ஸ்டோன் ரேஸை விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த விளையாட்டு போட்டியில் அஜித்தின் டீம் வெற்றி பெற்றது.

இந்நிலையில், விளையாட்டுப் போட்டி நடைபெறும் இடத்தில் நடந்து செல்வதற்கு பதிலாக பயன்படுத்தப்படும் ஸ்கேட்டிங் சைக்கிளில் விஜய் வலம் வந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தவெக ஆதரவாளர்களும், விஜய் ரசிகர்களும் இதை பகிர்ந்து வருகிறார்கள். ஆனால் சிலர் இது AI வீடியோ எனவும் சொல்லி வருகிறார்கள்.