Cinema News
தனுஷ் ஃபேன்ஸ் ஹேப்பி அண்ணாச்சி.! முதலமைச்சர் என்னவெல்லாம் சொல்லிருக்கார் கொஞ்சம் பாருங்க..,
பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் தனுஷ் ஆகியோர் கூட்டணியில் உருவான மற்றுமொரு மெகா ஹிட் திரைப்படம் அசுரன். இத்திரைப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்து இருந்தார்.
இந்த திரைப்படம் நில ஆக்கிரமிப்பு, கல்வியின் முக்கியத்துவம், ஜாதி ரீதியான வேறுபாடு என பல்வேறு விஷயங்களை சாமானியனுக்கும் புரியும் வண்ணம் மிக தெளிவாக ஆக்ஷன் கலந்து பேசி இருந்தது. அசுரன் படத்தில் வரும் வசனங்கள் அனைத்தும் ரசிகர்களால் வெகுவாக ஈர்க்கப்பட்டது.
இந்த வசனத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டு பேசிய உள்ளாராம். அதாவது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் ஓர் பள்ளி திறப்பு விழாவில் பேசும்போது, ‘ ஒரு மனிதரிடம் இருந்து யாராலும் பறிக்க முடியாத சொத்து கல்வி. கல்வி என்பது இருளில் இருந்து நம்மை வெளிச்சத்திற்கு கொண்டு செல்வது தான் .’ என்று பேசி இருப்பார்
இதையும் படியுங்களேன் – கமல் கிட்ட கத்துக்கோங்க.! ஆண்டவரின் 20 வருட செய்கை.! வீடியோவை ரிலீஸ் செய்த லோகேஷ்..!
இதேபோன்ற வசனத்தை அசுரன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் தனுஷ் தனது மகன் கதாபாத்திரத்தில் நடித்த கென் கருணாஸிடம் கூறுவார். நம்மிடம் காசு இருந்தால் வாங்கிப்பானுக, நிலம் இருந்தால் புடுங்கிபானுங்க. ஆனால். படிப்ப மட்டும் நம்மிடம் இருந்து யாராலும் திருட முடியாது சிதம்பரம். அதனால் படிப்பு மிக முக்கியம்.’ என்று வசனம் பேசும் விட்டு செல்வார் தனுஷ். அத்துடன் படம் முடியும்.
இதேபோன்று இன்று முதலமைச்சர் பேசி உள்ளதால், தனுஷ் ரசிகர்கள் அதனை குறிப்பிட்டு இணையத்தில் கொண்டாடி வருகின்றனர். உண்மையில் இந்த பாராட்டுக்கள் சென்றடைய வேண்டியது அந்த வசனத்தை எழுதிய இயக்குனர் வெற்றிமாறன் அவர்களுக்குத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.