மதுராந்தகத்தில் ரோட் ஷோ!.. டீக்கடையில் விஜய்!.. வைரல் போட்டோஸ்!…
மதுராந்தகத்தில் விஜய் செய்த ரோட் ஷோ
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வருகிற 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் முதல்வர் விஜய் அந்த இரண்டு தொகுதிகளிலும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

ஏற்கனவே மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு தவெகவுக்கு ஆதரவாக பேசி வாக்குகள் சேகரித்தார்.
இந்நிலையில் இன்று மாமண்டூர் முதல் மதுராந்தகம் வரை சுமார் 45 கிலோ மீட்டருக்கு முதல்வர் விஜய் ரோட் ஷோ நடத்தினார்..

முதல்வர் விஜய் வருகிறார் என தெரிந்ததும் பொதுமக்களும், ரசிகர்களும், தவெக தொண்டர்களும் சாலையோரத்தில் அவரை காண குவிந்து விட்டனர். விஜயின் வாகனம் வரும்போது அவரை பார்த்து அவர்கள் கையசைத்து தங்களின் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டனர்.

முதலமைச்சர் விஜயம் தன்னால முடிந்தவரை பொதுமக்களை பார்த்து கையைசைத்து சென்றார்
. ரோ ஷோவுக்கு பெண்கள், சிறுவர், சிறுமிகள், மாணவர்கள், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு அனுமதி இல்லை என்று கூறியிருந்தாலும் அவர்களில் பலரும் அதில் கலந்து கொண்டனர். ரோட் ஷோவில் பங்கேற்கும் மக்களுக்கு குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகளை தவெக தரப்பு ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிலையில், மதுராந்தகத்தில் ஒரு டீக்கடையில் பொதுமக்களுடன் அமர்ந்து முதல்வர் விஜய் டீ சாப்பிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.