latest news

ரோட் ஷோவில் ஜேசன் சிக்மா போட்டோவை தூக்கி காட்டிய விஜய்!.. செம வைப்!…

சிக்மா போஸ்டரை துக்கிப்பிடித்த விஜய்

நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் தற்போது கோலிவுட்டில் இயக்குனராக மாறியிருக்கிறார். நடிகர் விஜய்யோ அரசியல் கட்சியை துவங்கி தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக மாறியிருக்கிறார். ஜேசன் சஞ்சய் அப்பா விஜயை போல சினிமாவில் நடிகராக வருவார் என விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அவரோ சிக்மா திரைப்படம் மூலம் இயக்குனராகி விட்டார்.

அவர் இயக்கியுள்ள சிக்மா திரைப்படம் இன்று காலை வெளியானது. இந்த படத்தில் நிறைய குறைகள் இருந்தாலும் படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது..

மகன் ஜேசன் சஞ்சயின் முதல் திரைப்படம் இன்று வெளியான நிலையில் அவரின் அப்பா தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக மதுராந்தகத்தில் இன்று ரோட் ஷோட் நடத்தினார். அப்போது சிக்மா படத்தின் பெயர் இருக்கும் போட்டோ ஒன்றை தவெக தொண்டர் ஒருவர் விஜய்க்கு பரிசாக கொடுத்தார்.

அந்த போட்டோவை விஜய் தனது தலைக்கு மேலே தூக்கி காட்டினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில வருடங்களாகவே விஜய் தனது குடும்பத்துடன் வசிக்காமல் தனியாக வசிப்பதாக சொல்லும் நிலையில் மகனுக்காக விஜய் செய்த இந்த செயல் வரவேற்பை பெற்றிருக்கிறது.

Author

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மின் அஞ்சல் முகவரி [email protected]