கோப்ரா பட இயக்குனர் ரெட் கார்டு விவகாரம்....! சொந்த செலவில் சூனியம் வைக்க காத்திருக்கும் பிரபலம்...!
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான படம் கோப்ரா. கடந்த 3 வருடங்கள் போராட்டத்திற்கு பிறகு பெருத்த எதிர்பார்ப்புடன் திரைக்கு வந்த படம் பெரும் ஏமாற்றத்தை சந்தித்தது. மேலும் நடிகர் விக்ரமும் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தார்.
பொன்னியின் செல்வன் படத்தை காட்டிலும் இந்த படத்தின் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தார். ஆனால் ஏமாற்றத்தை தான் தந்தது. மேலும் படத்தை எடுத்த இயக்குனர் அஜய் ஞானமுத்து மீது தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ரெட் கார்டு விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இதையும் படிங்கள் : மக்களுக்கு நீ என்ன செஞ்சுருக்க…? விஜயகாந்துக்கு ஆதரவாக ரஜினியை வெளுத்து வாங்கிய ஆச்சி..
ஆனால் இதையெல்லாம் பற்றி கவலை கொள்ளாதவராய் இருக்கிறாராம் அஜய் ஞானமுத்து. ஏனெனில் அடுத்த படத்திற்கு விக்ரம் கால்ஷீட் கொடுத்துள்ளது ஒரு புறம் விக்ரமை நம்பி பணத்தை போட ஏராளமான தயாரிப்பாளர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இதை கருத்தில் கொண்டு தான் இயக்குனர் கூலாக இருக்கிறாராம்.
இன்னொரு செய்தி என்னவெனில் கோப்ரா படப்பிடிப்பின் போதே தயாரிப்பாளர் பணத்தை கொடுக்க நிறுத்த கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் பாதி பணத்தை போட்டு தான் படத்தை எடுத்துள்ளார்களாம். அதுமட்டுமில்லாமல் இன்னும் 3 படங்களுக்கு படம் எடுக்க தான் பைனான்ஸ் பண்ணுவதாகவும் கூறியிருக்கிறாராம் இர்ஃபான். இவர்கள் இருக்கும் போது எனக்கு என்ன கவலை என்ற மன நிலைமையில் இருக்கிறாராம் அஜய். ஆனால் எல்லாம் தெரிந்தும் துணிந்து இறங்குகிறார் இர்ஃபான்.