வாஷ்-அவுட் ஆன கோப்ரா...பல கோடி நஷ்டம்...தலையில் துண்டை போட்ட தயாரிப்பாளர்....
டிமாண்டி காலணி, இமைக்கா நொடிகள் என இரண்டு ஹிட் படங்களை இயக்கியவர் அஜய் ஞானமுத்து. அடுத்து விக்ரமை வைத்து கோப்ரா படத்தை துவக்கினார்.
தன்னை அடுத்த ஷங்கராக நினைத்துக்கொண்ட அஜய் ஞானமுத்து சரியான திட்டமிடல் இல்லாமல் 3 வருடங்கள், பல நாடுகளுக்கும் சென்று படப்பிடிப்பு நடத்தி கூறிய பட்ஜெட்டை விட பல கோடிகளில் படத்தை முடித்தார். இப்படத்தின் பட்ஜெட் ரூ.100 கோடி என செய்திகள் வெளியானது.
சமீபத்தில் வெளியான இப்படம் ரசிகர்களை கவராமல் ரிலீஸ் ஆன அன்றே தியேட்டரில் காத்து வாங்கியது. இதனால், தயாரிப்பாளர் மற்றும் வினியோகஸ்தர்களுக்கு பல கோடிகள் நஷ்டம். படம் வெளியாகி ஒருவாரம் கழித்தும் தமிழகத்தில் இப்படம் ரூ.23 கோடியை மட்டுமே வசூலித்துள்ளது.
இந்நிலையில், தற்போது பல தியேட்டர்களில் இப்படம் தூக்கப்பட்டுவிட்ட நிலையில், கோப்ரா திரைப்படத்தால் ரூ.40 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக டிரேடிங் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. ஏற்கனவே, அஜய் ஞானமுத்து மீது தயாரிப்பாளர் சங்கம் வழியாக நடவடிக்கை எடுக்கும் வேலைகள் நடந்து வருகிறது.
இப்படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் அடுத்து லோகேஷ் - கனகராஜ் இயக்கும் புதிய படத்தை தயாரிக்கவுள்ளார். இப்படம்தான் அவருக்கு கை கொடுக்கும் எனத்தெரிகிறது. அதேபோல், விக்ரமுக்கும் கடந்த பல வருடங்களாகவே ஹிட் படங்கள் இல்லை. பொன்னியின் செல்வன் அந்த குறையை தீர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.