சிங்கிளா வந்த என்னை தாயாக்கிட்டாங்க...! கோப்ரா படத்தில் பட்ட கஷ்டங்களை புலம்பி தீர்த்த நடிகை...
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் கோப்ரா. ஏஆர்.ரகுமான் இசையில் அமைந்த இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி நடித்திருக்கிறார்.மேலும் படத்தின் படப்பிடிப்புகள் எல்லாம்
முடிவடைந்த நிலையில் படம் வருகிற 31 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருக்கிறது.
படத்திற்கான புரோமோஷன் வேலைகள் எல்லாம் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழ் நாடு, ஐதராபாத் என இரு மாநிலங்களிலும் புரோமோஷனை செய்து வரும் விக்ரம் போகிற இடமெல்லாம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார். மேலும் ரசிகர்களையும் உற்சாகப்படுத்தி வருகிறார்.
இதையும் படிங்கள் : கோபி கல்யாணத்துக்கு தேதி குறிக்க வேண்டியதுதான்!….ராதிகா ஷாப்பிங் செய்த வீடியோ…
இந்த நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் பிரஸ் மீட்டில் புரோமோஷன் போய்க் கொண்டிருந்த சமயத்தில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சசிகுமார் பட நடிகை மியா தன் ஆதங்கத்தை கொட்டி தீர்த்தார். இவர் சசிகுமாருடன் வெற்றிவேல் என்ற படத்தில் ஜோடியாக நடித்திருப்பார். அது மட்டுமில்லாமல் ஒரு சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.
இதையும் படிங்கள் : ’பத்து தல ‘ சிம்பு படமா? கௌதம் கார்த்திக் படமா? சந்தேகத்தை கிளப்பிய பிரபல நடிகர்கள்….!
இந்த நிலையில் கோப்ரா படம் 2020ல் ஆரம்பமான போது நான் சிங்கிளாக இருந்தேன். இரண்டாவது செட்யூலில் திருமணம், மூன்றாவது செட்யூலில் கர்ப்பமாக இருந்தேன். இப்பொழுது புரோமோஷன் நடக்கிற சமயத்தில் குழந்தையோடு வந்திருக்கிறேன். ரொம்ப நாளாக இழுத்துக் கொண்டே போய்விட்டது படப்பிடிப்பு. எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டு சூட்டிங் வந்தது கொஞ்சம் கஷ்டமாக இருந்தது . இருந்தாலும் படம் நல்ல படியாக வந்திருக்கிறது என்று கூறினார்.