More
Categories: Cinema News latest news

இந்தியன் 2 ஏப்ரல் மாதம் கூட வராது!.. அந்த பிரபலத்துக்கும் ஷங்கருக்கும் சண்டை.. பத்த வச்ச பயில்வான்!

இயக்குனர் ஷங்கருக்கும் இசையமைப்பாளர் அனிருத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாகவும் இந்தியன் 2 எதிர்பார்த்ததை போல ஏப்ரல் ரிலீஸ் ஆக வாய்ப்பில்லை என பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய யூடியூப் வீடியோவில் பேசி கமல்ஹாசன் ரசிகர்களை காண்டாக்கி விட்டார்.

லைகா தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா, எஸ்.ஜே. சூர்யா, விவேக், நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் நடித்த இந்தியன் 2 திரைப்படம் பல ஆண்டுகளாக உருவாகி வருகிறது.

Advertising
Advertising

இதையும் படிங்க: அந்த நடிகையோட “கட்டிப்புடி கட்டிப்புடிடா” ரேஞ்சுக்கு ஆடிட்டு!.. அம்மான்னு சொன்னா எப்புடுறா பாபு!..

6 மணி நேரத்துக்கு மேல் ஃபூட்டேஜ் வந்த நிலையில், அதை அழகாக 2 பாகங்களாக பிரித்து வெளியிடலாம் என ஷங்கர் பலே ஐடியாவை லைகாவுக்கு சொல்லி ஆறுதல் படுத்தியிருக்கிறார்.

ஆனால், இந்தியன் 2 படத்தின் இன்ட்ரோ பாடல் வெளியாகி ரசிகர்களுக்கு பிடிக்காமல் போன நிலையில், ஷங்கருக்கும் அனிருத்துக்கும் மோதல் வெடித்துள்ளதாகவும் இருவருக்கும் இடையே யாராவது சமரசம் பேசினால் தான் இந்தியன் 2 படமே வரும் என்றும் இந்தியன் 3 படத்துக்கும் அனிருத்தை இசையமைக்க தனி சம்பளம் கேட்பதால் பிரச்சனை பெரிதாகி விட்டதாக பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: சிவகார்த்திகேயன் போல சிங்கராக மாறிய சந்தானம்!.. வாய்ஸ் சகிக்கல என கலாய்க்கும் நெட்டிசன்கள்!..

அதன் காரணமாகத்தான் கிடப்பில் கிடந்த ராம் சரணின் கேம் சேஞ்சர் படத்தின் இசையை தமனை வைத்து முடித்துள்ள நிலையில், விரைவில் வெளியிட ஷங்கர் திட்டமிட்டு இருப்பதாக கூறுகின்றனர்.

இந்தியன் 2 திரைப்படம் வெளியாக ஜூன் மாதம் ஆவது ஆகிவிடும் என்கின்றனர். இந்தியன் 3 இந்த ஆண்டு வெளியாகுமா அல்லது அடுத்த ஆண்டு பொங்கல் ரிலீஸா? என்பது தெரியவில்லை.

Published by
Saranya M

Recent Posts