அடேங்கப்பா!.. காமெடி கிங் பிரம்மானந்தம் செய்த சாதனை!.. கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற பெருமை!..

brahmanandam
பிரபல காமெடி நடிகரான பிரம்மானந்தம் 39 வருடங்களில் 1000 படங்களில் நடித்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்று இருக்கின்றார்.
தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் பிரம்மானந்தம். தெலுங்கு மட்டும் இல்லாமல் தமிழ் மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்து வரும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். தன்னுடைய காமெடியால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திருக்கின்றார் நடிகர் பிரம்மானந்தம்.
இதையும் படிங்க: சமரச பேச்சுவார்த்தை!.. நேரில் ஆஜரான ஜெயம் ரவி-ஆர்த்தி ரவி?!… மீண்டும் இணையுமா இந்த ஜோடி?…
காமெடி நடிகராக மட்டுமில்லாமல் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். தெலுங்கு சினிமாவில் ஆரம்பத்தில் பல கஷ்டங்களை சந்தித்தாலும் அதன் பிறகு தன்னுடைய திறமையால் தற்போது நிற்க நேரமில்லாமல் படங்களில் நடித்து வருகின்றார். தெலுங்கு சினிமாவில் இருக்கும் அனைத்து முன்னணி நடிகர்களுடன் காமெடி கதாபாத்திரங்களில் இவர் நடித்திருக்கின்றார்.
இவரின் கால்ஷீட்டுக்காக பல நடிகர்கள் காத்திருக்கிறார்கள். 67 வயதாகும் பிரம்மானந்தம் இந்தியாவில் பணக்கார நடிகராகவும் இருந்து வருகின்றார். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் சேர்ந்து 1000 படங்களுக்கு மேல் இவர் நடித்திருக்கின்றார். இவரின் சொத்து மதிப்பு மட்டும் கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகின்றது.

Brahmanandam
சமீபத்தில் மகேஷ்பாபு நடிப்பில் வெளியான குண்டூர் காரம் படத்தில் நடித்து இருந்தார். இந்நிலையில் இவர் தற்போது கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்று இருக்கின்றார். கடந்த 39 வருடங்களில் 1000 படங்களில் நடித்த ஒரே நடிகர் பிரம்மானந்தம் என்ற பெருமையை பெற்றிருக்கின்றார். இதனால் அவரது பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்திருக்கின்றது.
நடிப்பை தாண்டி இவர் ஓவியம் வரைவதிலும் வல்லவர். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த பிரம்மானந்தம் மிகுந்த போராட்டத்திற்கு பிறகு இந்த நிலைமையை எட்டி இருக்கின்றார். இவர் மற்ற நடிகர்களின் படங்களை காட்டிலும் சிரஞ்சீவி திரைப்படங்களில் அதிகமாக நடித்திருக்கின்றார்.
இதையும் படிங்க: Simran: சிம்ரன் காட்டிய நன்றியுணர்வு.. அசந்து போன கலைப்புலி தாணு! 15 வருடத்துக்கு பிறகும் இப்படியா?
இவரது மிமிக்ரி திறமையை பார்த்து வியந்து போன சிரஞ்சீவி பல படங்களில் வாய்ப்பு கிடைப்பதற்கு உதவியாக இருந்திருக்கின்றார். இதனை கூட அவர் சமீபத்திய பேட்டியில் கூறியிருந்தார். இவருக்கு கடந்த 2009ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும் கிடைத்தது. அது மட்டும் இல்லாமல் பல மாநில விருதுகள், பிலிம்பேர் விருதுகள் உள்ளிட்டவற்றை வாங்கி இருக்கின்றார். இது எல்லாம் தாண்டி தற்போது கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்து மிகப்பெரிய சாதனையை செய்திருக்கின்றார். இதைத்தொடர்ந்து அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.