14 வருட சபதம்!.. அடிவாங்கியே ஆலமரமாக வளர்ந்த செந்தில்!.. யாருக்கும் தெரியாத மறுபக்கம்!..

நகைச்சுவை நடிகர் செந்தில் தனக்கென ஒரு தனி பாணியுடன் நடித்து வந்தவர். இன்றும் எளிமையானவராக பார்க்கப்படுபவர். இவரது குழந்தைத்தனமான நடிப்பும், இவரின் குரலும் ரசிகர்களை அதிகமாக ஈர்த்தது.

கவுண்டமணியுடன் இணைந்து இவர் கலக்கியெடுத்திருப்பார். கவுண்டமணியிடம் அடி வாங்குவதையே திரையில் பழக்கமாக வைத்து நடித்தவர். இப்படிப்பட்ட காட்சிகளே இவரது வெற்றிக்கு அதிகம் உதவியது. இதனைத்தான் இவரது ரசிகர்களும் அதிகமாக விரும்பினர். நிஜவாழ்வில் இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள். பல முக்கியமான முடிவுகளை கவுண்டமணியிடம் கேட்டுத்தான் செந்தில் எடுப்பாராம்.

இதையும் படிங்க: எங்க தளபதிக்கு விசில் போடுங்க.. ‘கோட்’ படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்டது ஏஜிஎஸ்

"கடைக்காரர் குடும்பம்" என அழைக்கப்படுமாம் இவரது குடும்பம். செல்வச்செழிப்பான தாய், தந்தைக்ககே இவர் மகனாக பிறந்தார். ஒருநாள் பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு வீட்டிலிருந்து கொஞ்சம் பணத்தை எடுத்துக்கொண்டு சென்னையை நோக்கி திடீரனெ பயணித்திருக்கிறார்.

senthil

சென்னைக்கு வந்திறங்கிய சில நாட்களில் இவர் ஒரு கடையில் வேலைக்கு சேர்ந்திருக்கிறார். அப்பொழுது ஒரு மதுபான கடையில் வேலை பார்க்க வாய்ப்பு கிடைத்துள்ளது. செந்திலின் ஊர்க்காரர் ஒருவர் அங்கே வைத்து பார்த்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

'நீ வேலையே பார்க்க வேண்டாம் எங்களோடு ஊருக்கு வந்துவிடு' என அவரது உறவினர்கள் அழைக்க அதனை மறுத்துவிட்டாராம் செந்தில். மதுபான கடைக்கு வந்த ஒரு சில சினிமா பிரபலங்களின் அறிமுகம் கிடைக்க, திரை துறைக்கு வந்தார். முன்னதாக நாடகங்களிலும் நடித்திருக்கிறார்.

இதையும் படிங்க: “நீ சுகமா இருப்ப, நாங்க நடு ரோட்டுக்கு போகனுமா?”… வெளுத்து வாங்கிய ராஜன்… கடுப்பான செண்ட்ராயன்

ஆரம்பத்தில் ஒரு சில காட்சிகளில் முகத்தைக்காட்டினார். கவுண்டமணியுடன் இணைந்து நடித்த "வைதேகி காத்திருந்தாள்"படம் இவருக்கு மிகபெரிய திருப்புமுனையாக அமைந்தது. கவுண்டமணியிடம் இவர் கேட்கும் கேள்விகளும், அவரை பார்த்தால் இவர் பயந்து , பம்மும் விதமான நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டது.

ரஜினி, கமல், விஜயகாந்த் போனற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நிறைய படங்களில் நடித்திடுக்கிறார். மேலும் ரஜினிகாந்தின் அபிமானமான நகைச்சுவை நடிகரானார். படங்களில் தனக்கு நிகரான முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகளை செந்திலுக்கு இடம்பெற செய்தார் ரஜினி. நான் ஜெயித்தே தீருவேன் என 14 வருடங்கள் உழைத்திருக்கிறார்.

தனக்கென ஒரு அங்கீகாரம் கிடைத்த பிறகே தனது சொந்தவூருக்கு சென்றிருக்கிறார். தனது பெற்றோர் பார்த்த கலைச்செல்வியையே திருமணம் முடித்துக்கொண்ட இவர். தற்பொழுது தனது பேரன், பேத்திகளுடன் மகிழ்ச்சியாக பொழுதை போக்கி, அரசியலிலும் தலை காட்டியும் வருகிறார்.

 

Related Articles

Next Story