சினிமாவில் ரப்பர் போல் வளைந்து நெளிந்து ஆடியும், பாடியும், சார்லி சாப்ளின் போல காமெடி செய்தியும் தன்னோட அசாத்திய திறமையால ஒரு காலத்தில் எம்ஜிஆர், சிவாஜி போன்ற முன்னணி நடிகர்களுக்கே சவாலாக இருந்தவர் நகைச்சுவை நடிகர் சந்திரபாபு.
அவரது அசாத்திய திறமையைத் தமிழ் சினிமா உலகம் முழுவதுமாக உள்வாங்குவதற்குள் அவர் இந்த மண்ணை விட்டு அகன்று விட்டார் என்பது வருத்தத்திற்குரிய விஷயம். அந்த மாபெரும் நடிகருக்கு எதனால் இவ்வளவு துயரம்? ஏன் இந்த பரிதாபமான வாழ்க்கை? இறுதிநாள்களில் அவரது நிலைமை எப்படி இருந்தது என்று பார்ப்போம்.
சினிமாவில் புரட்சி செய்த காமெடி நடிகர்கள் பலர் இருப்பார்கள். அவர்களில் ஒரு சிலர் தான் மக்களின் மனதில் நிலைத்து நிற்பார்கள். அந்த வகையில் நடிகர் சந்திரபாபுவின் இறுதிகாலங்கள் மிகவும் சோகமயமாகவே இருந்தது.
தூத்துக்குடிக்காரரான இவர் திரையுலகில் ஒரு சமயம் ரொம்பவே பிசியாக இருந்தார். இவரது மனைவி இவரை விட்டுவிட்டு இன்னொருத்தருடன் தான் போவேன் என்று அடம்பிடிக்கிறார். தொடர்ந்து சந்திரபாபுவும் அவர் விருப்பப்படியே அவரது மனைவியை இன்னொருவருடன் சேர்த்து வைக்கிறார். இதனால் அவர் குடிப்பழக்கத்திற்கும் அடிமையாகி விடுகிறார்.
மாடிவீட்டு ஏழை என்ற படத்தைத் தயாரிக்கிறார். இது பாதியிலேயே நின்று போய் விடுகிறது. இதனால் கடன் சுமையில் தத்தளிக்கிறார். மேலும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விடுகிறார். படப்பிடிப்புக்கும் ஒழுங்காக வருவதில்லை என்ற விமர்சனத்திற்குள்ளாகிறார். எவ்வளவு தான் சோதனை வந்தாலும் அதற்கான முயற்சிகளை மட்டும் இவர் கைவிடவில்லை. தட்டுங்கள் திறக்கப்படும் என்று ஒரு படம் எடுக்கிறார். இதுவும் படுதோல்வி அடைகிறது.
ஒரு கட்டத்தில் வறுமை இவரை வாட்டி எடுக்கிறது. ஒரு வேளை சாப்பாட்டுக்கே வழியில்லாமல் தவிக்கிறார். வீட்டுக்கு வாடகைக் கொடுக்க முடியவில்லை. கரண்ட் பில் கட்டவில்லை. பியுஸ புடுங்கிட்டுப் போய் 3 நாள்கள் கரண்ட் இல்லாமல் தவித்தார்.
ஏஎல்.நாராயணன் என்பவர் 5 நாள் வேலைதான் இருக்கும். 20 ஆயிரம் தான் தரமுடியும் என்ற ஒப்பந்ததத்துடன் படத்தில் நடிக்க சந்திரபாபுவை சம்மதிக்க வைக்கிறார். முதல் நாள் படப்பிடிப்பில் 2500 ரூபாய் கொடுக்கிறாங்க. மீதித் தொகை வரவில்லை.
இன்னொரு முறையும் அதே நண்பர் வருகிறார். படத்துல நடிக்க சம்மதமான்னு கேட்க, நான் இந்த முறை சம்பளம் கேட்கல. சோறு போடுவீங்களான்னு சந்திரபாபு கேட்கிறார். ஒரு பக்கம் சாப்பாட்டுக்கே வழியில்லாத வறுமை. இன்னொரு பக்கம் குடிச்சியே ஆகணும்கற நிலைமை.
சந்திரபாபு கடைசியா நடிச்ச படம் நீதி. இந்தப்படத்திலும் நடிக்க முடியாத அளவு ரொம்பவே சிரமப்பட்டார். அவரது உடல்நிலையும் மோசமானது. மனோரமாவுடன் நடனமாட முடியாத ஒரு சூழல். அப்போ அவர் மனோரமாவைப் பார்த்துக் கேட்கிறார். அம்மா அம்மா இவ்வளவு வேகமாக ஆடாதம்மா…என்னால ஆட முடியாதுங்கறார். அப்போ சந்திரபாபு உடம்புக்கு மட்டும் ஒரு ஷாட். கையைக் கால்களை எல்லாம் ஆட்டுற மாதிரி ஒரு ஷாட்.
ரெண்டையும் சேர்த்துருக்காங்க. படப்பிடிப்பில் ஆட முடியாமல் மயக்கம் போடுகிறார். மருத்துவமனையில் அனுமதிக்கிறாங்க. அளவுக்கு அதிகமாக குடிச்சிக்கிட்டே இருந்ததால அவருக்கு மஞ்சள் காமாலை நோய் இருக்குறது தெரியவருது. சாப்பாட்டுக்கே வழியில்லாமல் இருக்கும் சந்திரபாபுவுக்கு மருத்துமனையில் பில் எப்படி கட்ட முடியும்? அவருக்குத் தெரிந்த இயக்குனர்கள் ராமண்ணா, ஸ்ரீதர், தயாரிப்பாளர் பாலாஜி, நண்பர் எம்.எஸ்.விஸ்வநாதன், தேங்காய் சீனிவாசன் இவங்க தான் இந்த நேரத்தில உதவி செய்தவங்க. மருத்துவரும் மிகவும் எச்சரித்து அனுப்பிருக்காங்க.
இனிமேலும் நீங்க குடிக்கக்கூடாது. இப்பவே கடைசி கட்டத்துக்குப் போயிட்டீங்கன்னு சொல்லி அனுப்பிருக்கார். அதையும் மீறி அவர் குடிச்சிக்கிட்டே இருந்தார். மார்ச் 7, 1974ல் நள்ளிரவில் மிகவும் உடல்நிலை மோசமாகி ரத்தவாந்தி எடுத்துள்ளார். அப்போது அவரது உதவியாளர் அண்ணாமலை ரொம்ப பயந்து அவரை சுத்தம் செய்து படுக்க வைக்கிறார். அப்போ ஒரு விஷயத்தை சந்திரபாபு அவரிடம் சொல்றாரு. நான் தூங்கப்போறேன்.
நீ எதையும் மனசில நினைச்சிக்காத. அமைதியாப் போய் படு என்றார். இதுதான் சந்திரபாபு பேசிய கடைசி வார்த்தைகள். மறுநாள் காலை அந்த உன்னத கலைஞனுக்கு விடியவே இல்லை. நான் இறந்து போன விஷயத்தை யாரிடமும் சொல்லக்கூடாது.
என் ஆருயிர் நண்பன் எம்.எஸ்.விஸ்வநாதனிடம் தான் முதல்ல சொல்லணும். அவன் தான் என் உடல எடுத்துட்டுப் போய் அடக்கம் பண்ணனும்னு சொல்லிருக்காரு. அவர் இறந்ததுக்குப் பிறகு உதவியாளர் அண்ணாமலை இந்த விஷயத்தை எம்.எஸ்.வியிடம் சொல்கிறார். அவரும் பதறியபடி நெஞ்சைப்பிடித்தவாறே உட்கார்ந்து விடுகிறார்.
இறுதிச்சடங்கை நடத்தி வைத்தவர் பாதிரியார் அடைக்கலம். அவரும் கதறி கதறி அழுகிறார். முறைப்படி பாதிரியார் அழவே கூடாது. ஏன்னா அவரு தான் சந்திரபாபுவோட கல்யாணத்தையும் நடத்தி வைத்தார். தனக்கான கல்லறைக்குள்ள இடத்தை பிஷப் அடைக்கலம் சந்திரபாபுவிற்கு விட்டுக்கொடுக்க அங்கு அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது.
இவரது வாழ்க்கையைப் பார்க்கும் போது புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை. வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை என்ற இவரது பாடல் தான் நம் நினைவுக்கு வருகிறது.
புஷ்பா 2…
உதவி இயக்குனராகத்…
மகாராஜா திரைப்படம்…
Sathyaraj: 80களில்…
சினிமாவில் பல…