More
Categories: Cinema History Cinema News latest news

முதல் படத்திலேயே செம மாஸ் கலாய் கொடுத்த நகைச்சுவை ஜாம்பவான்…! செந்திலுடன் மட்டும் இவ்ளோ படங்களா?

கவுண்டமணி என்றாலே நமக்கு நகைச்சுவை தான் நினைவுக்கு வரும். 80….90களில் தமிழ்சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு காமெடி நடிகராக இருந்தார். இவரைப் பற்றிய சில தகவல்களைப் பார்க்கலாம்.

கவுண்டமணியின் சொந்த ஊர் கோவை மாவட்டம், பல்லகொண்டாபுரம். இயற்பெயர் சுப்பிரமணி. சிறுவயதிலேயே நாடகம் நடிக்க ஆசை. பள்ளி செல்லாமல் நாடகக் கொட்டகையிலேயே காலத்தைக் கழித்து வந்தார்.

Advertising
Advertising

ஒரு நாள் அவரது ஊரில் நாடகம் போட்டனர். இதில் கவுண்டர் வேடம் ஏற்று நடித்தார் நம்ம கவுண்டமணி. இவரது நடிப்பைப் பார்த்து அந்த ஊர்க்காரர்கள் அசந்து போய்விட்டார்கள். அன்று முதல் இவரை கவுண்டமணி என்றே அழைத்தனர்.

அப்போது இவருக்கு 15 வயது. இவரது சகோதரி மைலாம்பாள் சென்னைக்கு கவுண்டமணியை அழைத்து வந்து பாய்ஸ் நாடக கம்பெனியில் சேர்த்து விட்டார்.

முதலில் சர்வர் சுந்தரம், ராமன் எத்தனை ராமனடி, அன்னக்கிளி போன்ற படங்களில் கூட்டத்தில் ஒருவராக வந்து போனார். 16 வயதினிலே படம் தான் இவருக்கு அறிமுகம். அதிலும் காமெடி வேடம். முதல் படத்திலேயே பட்டையைக் கிளப்பிவிட்டார்.

Goundamani, Senthil

தொடர்ந்து எக்கச்சக்கமான பட வாய்ப்புகள் இவருக்கு வந்து குவிந்தன. படுபிசியான காமெடி நடிகரானார். சுமார் 700 படங்களுக்கு மேல் நடித்து விட்டார். இவற்றில் செந்திலுடன் மட்டும் 450 படங்கள் நடித்துள்ளார்.

சின்ன வயசுல அதிகம் பேசாத இவர் சினிமான்னு வந்ததும் செம கலாய் கலாய்க்கிறார். சாந்தி என்ற பெண்ணைக் காதலித்து திருமணம் செய்தார். செல்வி, சுமித்ரா என 2 மகள்கள் உள்ளனர்.

இவர் பார்க்கத் தான் காமெடியன். படிப்பில் அறிவாளி என்பார் இயக்குனர் மணிவண்ணன். பாரதிராஜா தான் கவுண்டமணி எனப் பெயர் மாற்றினார். இவர் அம்மாவை ஆத்தா என்று தான் ஆசையாக அழைப்பாராம். வீட்டை விட்டு எங்கு கிளம்பினாலும் அம்மாவின் காலில் விழுந்து வணங்கி விட்டுத் தான் செல்வாராம்.

12 படங்களில் கவுண்டமணி ஹீரோவாகவும் நடித்து அசத்தியுள்ளார். இவருக்குப் பிடித்த நிறம் கருப்பு. அதை இங்கிலீஷ் கலருடான்னு சொல்வாராம். நண்பர்களிடம் பசி அடங்காத மாதிரி சாப்பிடுங்கடான்னு சொல்வாராம்.

Sathyaraj and Goundamani

இவருக்கு சத்யராஜ், கார்த்திக், அர்ஜூன் ஆகியோருடன் நல்ல நட்பு உண்டு. இவருக்குப் பிடித்த நகைச்சுவை நடிகர் சுருளிராஜன். புகைப்பிடிக்காதவர். அதே போல எவ்வித பார்டிகளிலும் இவர் கலந்து கொள்ள மாட்டாராம்.

ஒண்ணா இருக்கக் கத்துக்கணும், வரவு எட்டணா செலவு பத்தணா, நடிகன் ஆகிய படங்கள் தான் இவருக்குப் பிடித்த படங்கள்.

நன்றி மறந்தவர்களை மற…உதவி செய்தவர்களை மறவாதே என்பதே கவுண்டமணியின் வாழ்வியல் பாடம்.

இவர் சமீபத்தில் மாரடைப்பால் சிகிச்சைப் பெற மருத்துவமனை வந்தார். அப்போது மருத்துவமனைக்கு பல போன் கால்கள் வந்தன. இமெயில்கள் கணக்கில் அடங்காதவை. இதை நினைக்கும் போதெல்லாம்..கவுண்டமணிக்கு கண்ணீர் சுரக்குமாம்.

Published by
sankaran v

Recent Posts