கவுண்டமணி காமெடியில் கலக்கிய காமெடி நடிகர்!... கடைசிக்கட்ட வாழ்க்கையில் இவ்ளோ சோகமா?!..

by sankaran v |   ( Updated:2024-02-27 02:36:52  )
கவுண்டமணி காமெடியில் கலக்கிய காமெடி நடிகர்!... கடைசிக்கட்ட வாழ்க்கையில் இவ்ளோ சோகமா?!..
X

Pasi Narayanan

அந்தக் காலத்தில் இருந்து இந்தக் காலம் வரை காமெடி நடிகர்களில் சந்திரபாபு, நாகேஷ், கவுண்டமணி, செந்தில், சந்தானம், யோகிபாபுன்னு பலர் தமிழ்த்திரை உலகில் பட்டையைக் கிளப்பி இருக்கிறார்கள். சில நடிகர்கள் செம மாஸாக காமெடி பண்ணுவார்கள். ஆனால் அவர் யார் என்றே நமக்குத் தெரியாது. ஆனால் அவர் காட்சியில் வந்தாலே நாம் சிரித்து விடுவோம். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான் பசி நாராயணன்.

இவர் நடித்த பசி என்ற படம் இவருக்கு நல்ல வரவேற்பைக் கொடுத்தது. அதனால் அந்தப் படத்தின் பெயரையே தனது அடைமொழியாக வைத்து விட்டார். இவர் எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல், சரத்குமார் என முன்னணி நடிகர்கள் நடித்த படங்களில் எல்லாம் ஒரு சில காட்சிகளில் நடித்துள்ளார். ஆனால் பெரிய அளவில் நமது கவனத்தைப் பெறவில்லை.

கவுண்டமணி, செந்தில் நடித்த படங்களில் இவர் வந்துவிட்டால் காமெடி வேற லெவல் தான். சூரியன் படத்தில் கவுண்டமணி போனில் அரசியல்வாதி மாதிரி பேசி பந்தா பண்ணியதும், போன் வயர் பிஞ்சி ஒரு வருஷம் ஆச்சுன்னு இவர் சொல்வது காமெடி பட்டாசு ரகம். உடனே கவுண்டமணியும் விட மாட்டார். கவுண்டர் கொடுப்பவர் ஆயிற்றே. வாடா ஓட்டவாய் நாராயணான்னு பதிலுக்கு செம கலாய் கலாய்ப்பார்.

இவர் வெறும் காமெடி நடிகர் மட்டுமல்ல. நடனம், கதை சொல்லி, எழுத்தாளர் என பன்முகத்திறன் கொண்டவராம். ஆனால் பார்த்தால் அப்படி தெரியலையே எனக் கேட்பீர்கள். அதுதாங்க. ஆளைப்பார்த்து யாரையும் எடை போடக்கூடாதுங்கறதுக்கு இவர் தான் சாட்சி.

Pasi Narayanan

Pasi Narayanan

1960 முதல் 1990 வரை சுமார் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தனது 15வது வயதிலேயே மேடை நாடகங்களில் நடித்து விட்டாராம். அதன்பின் தான் வெள்ளித்திரைக்கு வந்தாராம்.

இவ்வளவு திறமை இருந்தபோதும் இவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. குடும்பமும் வறுமையில் தான் வாடியதாம். 1998ல் உடல்நலக்குறைவால் காலமனார். அந்த நேரத்தில் முதல்வராக இருந்த ஜெயலலிதா அவரது குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கினாராம். அது மட்டுமல்லாமல் மூத்த கலைஞர்களுக்கான குடும்ப உதவித்தொகையாக மாதம் ரூ.8125ம் கிடைக்க வழி செய்தாராம்.

Next Story